பழைய சுரங்கப் பாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பேரூராட்சித் தலைவர்

Saturday, 08 February 2014 00:00 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print

தினமணி              08.02.2014

பழைய சுரங்கப் பாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பேரூராட்சித் தலைவர்

செங்கல்பட்டை அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள பழைய சுரங்கப் பாதையை சுத்தப்படுத்தி நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சித் தலைவர் மக்கள் பயன்பாட்டு கொண்டு வந்தார்.

கூடுவாஞ்சேரியில், ரூ.15 கோடி மதிப்பில், கடந்த 3 ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலப் பணி மற்றும் ரயில்வே சுரங்கப் பாதை பணிகள் தற்போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை மேம்பால திட்டப் பணிகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் மத்தியில் புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி டிசம்பர் 28-ஆம் தேதி திடீரென ரயில்வே கேட் மூடப்பட்டதால் ஆத்திரமடைந்த மாடம்பாக்கம், ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினர். போராட்டத்தின் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய்த் துறை, நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி அதிகாரிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதையில் இருந்த குடிநீர் பைப்லைன், கேபிள் ஆகியவற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். பின்னர் மொபெட்டுகள் மற்றும் ஆட்டோக்கள் செல்லும் அளவுக்கு மின்விளக்கு  வசதிகளுடன் பாதை அமைக்கபட்டது.

அதை நந்தவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சித் தலைவர் எம்.கே தண்டபாணி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் ஜார்ஜ், பேரூராட்சி செயல் அலுவலர் குற்றாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் குமரவேல், டில்லீஸ்வரி, ஹரி, ஸ்ரீமதிராஜி, ரவி, முன்னாள் பத்மநாபன், தரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விரைவில் மேம்பாலப் பணிகளை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் செல்லும் கிராம மக்கள் தெரிவித்தனர்.