கோயம்பேடு, சாத்தாங்காடு வணிக கடைககள் குலுக்கல் மூலம் இன்று ஒதுக்கப்பட்டது

Saturday, 08 February 2014 00:00 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print

மாலை மலர்             08.02.2014 

கோயம்பேடு, சாத்தாங்காடு வணிக கடைககள் குலுக்கல் மூலம் இன்று ஒதுக்கப்பட்டது
 
கோயம்பேடு, சாத்தாங்காடு வணிக கடைககள் குலுக்கல் மூலம் இன்று ஒதுக்கப்பட்டது

சென்னை, பிப். 8 - சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மறைமலைநகர், மணலி புதுநகரில், காலிமனை ஒதுக்கீடு, கோயம்பேடு, சாத்தாங்காடு பகுதியில் கடை ஒதுக்கீடு வழங்க கடந்த மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில் இன்று எழும்பூர் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள 4 கடைகளுக்கும், சாத்தாங்காடு இரும்பு எக்கு அங்காடியில் 154 கடைகளுக்கு குலுக்கல் நடைபெற்றது.

சி.எம்.டி.ஏ. முதுமை கணக்கு அதிகாரி மலைச்சாமி முன்னின்று குலுக்கல் நடத்தினர்.

இதில் கோயம்பேட்டில் உள்ள 4 கடைகளுக்கு 261 பேர் விண்ணப்பித்து இருந்தனர். குலுக்கலில் வடிவேல், சுமதி, மதியழகன், சுசீலா சோதியா ஆகிய 4 பேர்களுக்கு கடை ஒதுக்கீடு கிடைத்தது.

இதேபோல் சாத்தாங்காட்டில் உள்ள 154 கடைகளுக்கு 27 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் குலுக்கலில் கடை கிடைத்தது.

45 நிமிடத்தில் குலுக்கல் முடிந்து கடைகள் ஒதுக்கப்பட்டது.

மறைமலைநகர் மற்றும் மணலி புதுநகரில் வீட்டு மனைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 12–ந்தேதி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் குலுக்கல் நடக்கிறது. இதில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.