குண்டம் திருவிழா நெருங்குவதால் ஆனைமலை பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

Monday, 10 February 2014 12:00 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print

தினகரன்             10.02.2014 

குண்டம் திருவிழா நெருங்குவதால் ஆனைமலை பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

ஆனைமலை, :  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா, கடந்த 30ம் தேதி கொடியேற்று நிகழ்ச்சியுடன்  துவங்கியது. வரும் 15ம் தேதி நடக்கும் குண்டத் திருவிழாவில், பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி உடக்க உள்ளதால், உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து  பக்தர்கள் வருகை துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

 குண்டம் திருவிழாவையொட்டி பக்தர்கள் அதிகம் வருவார்கள் என்பதால், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூற £க இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சப்-கலெக்டர் ரஷ்மிசித்தார்த் ஜெகடே உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. இப்பணியில் சுமார் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

 மாசாணியம்மன் கோயில் செல்லும் வழி மற்றும் சேத்துமடை ரோட்டருகே கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள பந்தல் பகுதி, நடைபாதை கடைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.

சுமார் 25க்கும் மேற்பட்ட கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா முடியும்வரை ஆக்கிரமிப்புகள் எங்கெங்கு எல்லாம் உள்ளது என்பதை கண்காணித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.