சென்னையில் 83 இடங்களில் ஒருங்கிணைந்த வரி செலுத்தும் மையங்கள்

Friday, 28 November 2014 10:08 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print
தி இந்து       28.11.2014  

சென்னையில் 83 இடங்களில் ஒருங்கிணைந்த வரி செலுத்தும் மையங்கள்

 சென்னையில் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல், 83 இடங்களில் ஒருங்கிணைந்த வரி செலுத்தும் மையங்கள் தொடங்கப்பட உள்ளன. அதாவது சென்னை மாநக ராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியையும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய தண்ணீர் வரியையும் ஒரே அலுவலகத்தில் ஒரே கவுண்டரில் செலுத்தலாம்.

இந்த வசதி சென்னை மாநகராட் சியின் 200 வார்டுகளிலும் அமல் படுத்தப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக 83 இடங்களில் இவை தொடங்கப்படுகின்றன. இதில் சில மையங்கள் மாநகராட்சி வார்டு அலுவலகங்களிலும், சில மையங் கள் சென்னை குடிநீர் வாரிய அலு வலகங்களிலும் அமைக்கப்படும்.

சொத்துவரியை காசோலை யாகவோ (செக்), வரைவு காசோலையாகவோ (டிடி) செலுத்த லாம். தண்ணீர் வரியை பணமா கவோ, காசோலையா கவோ (செக்), வரைவு காசோலையாகவோ(டிடி) செலுத்தலாம்.

தற்போது, மாநகராட்சிக்கான சொத்து வரியை ஆன்லைன் மூலமா கவும், வங்கியில் பணமாகவும், மண்டலம் மற்றும் வார்டு அலுவலகங்களில் செக் அல்லது டிடியாகவும் செலுத்தலாம்.