"வரி வசூல் மையங்கள் மார்ச் 31 வரை செயல்படும்'

Tuesday, 23 December 2014 09:24 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print

 தினமணி        22.12.2014

"வரி வசூல் மையங்கள் மார்ச் 31 வரை செயல்படும்'

கோவை மாநகராட்சியின் 2014-15ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டிற்கான சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் செலுத்துவதற்காக மார்ச் 31-ஆம் தேதி வரை வரி வசூல் மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி:

"கோவை மாநகராட்சிக்கு 2014-15ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வரையிலான சொத்து வரி நிலுவைகளை கடந்த அக்டோபர் 15-க்குள் செலுத்தியிருக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள சொத்து வரி, குடிநீர்க் கட்டணத்தை உடனடியாகச் செலுத்த வேண்டும். மேலும், மாநகர எல்லைக்குள் தொழில்புரிந்து வரும் தனிநபர், வணிக நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தொழில் வரி செலுத்த வேண்டும். நிலுவை வரியை 2015 மார்ச் 31-ஆம் தேதி வரை வரி வசூல் மையங்களில் செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படாமல் தவிர்க்குமாறு' அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கிழக்கு மண்டல வரி வசூல் மையங்கள்: திருச்சி சாலையில் உள்ள மண்டல அலுவலகம், வரதராஜபுரத்தில் உள்ள ஜெ.ஜெ. திருமண மண்டபம், விளாங்குறிச்சியில் உள்ள காந்தி வீதி, காளப்பட்டியில் உள்ள விளாங்குறிச்சி சாலை மையம்.

மேற்கு மண்டலம்: ஆர்.எஸ்.புரம், ராமச்சந்திரா சாலையில் உள்ள மண்டல அலுவலகம், காமராஜபுரம், சாயிபாபா காலனியில் உள்ள சிந்தாமணி நகர், பி.என்.புதூர், கவுண்டம்பாளையம் பழைய நகராட்சி அலுவலகம், வடவள்ளி பழைய பேரூராட்சி அலுவலகம், வீரகேரளத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சாலை, இடையர்பாளையம்.

மத்திய மண்டலம்: ஹூசூர் சாலையில் உள்ள மண்டல அலுவலகம், மாநகராட்சி பிரதான அலுவலகம், சுங்கம் ரவுண்டானா, டாடாபாத், ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி.

தெற்கு மண்டலம்: குனியமுத்தூரில் உள்ள மண்டல அலுவலகம், செல்வபுரம், போத்தனூர் பிரிவு அலுவலகம்.

வடக்கு மண்டலம்: மண்டல அலுவலகம், பயனீர் மில் சாலை, கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகில், கணபதி ராயப்பா நகர், ராமகிருஷ்ணாபுரம், சரவணம்பட்டி பழைய பேரூராட்சி அலுவலகம், துடியலூர் பழைய பேரூராட்சி அலுவலகம், சின்னவேடம்பட்டி பழைய பேரூராட்சி அலுவலகம்.