நெல்லை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் இலந்தகுளத்தில் சூழலியல் பூங்கா வரவு-ரூ.137.52 கோடி செலவு-140.90 கோடி பற்றாக்குறை-3.38 கோடி

Thursday, 28 March 2013 10:13 administrator நாளிதழ்௧ள் - நிதி மேலாண்மை
Print
தினகரன்      28.03.2013

நெல்லை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் இலந்தகுளத்தில் சூழலியல் பூங்கா வரவு-ரூ.137.52 கோடி செலவு-140.90 கோடி பற்றாக்குறை-3.38 கோடி


நெல்லை: நெல்லை மாநகராட்சி 2013-2014ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மேயர் விஜிலா நேற்று தாக்கல் செய்தார். இதில் மொத்த வரவு ரூ.137.52 கோடியும், செலவு ரூ.140.90 கோடியும், பற்றாக்குறையாக 3.38 கோடியும் நிணயிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் உள்ள முக் கிய அம்சங்கள்: நெல்லை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ரூ.290 கோடியில் அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.400 கோடி யில் பாதாள சாக்கடை விரிவாக்கத்திட்டம் செயல்படுத்தப்படுவதுடன், தாமிர பரணி ஆறு மாசுபடுவதை தடுக்கும் வகையில் ஆற்றுப்படுகையில் கழிவுநீர் கலக் கும் இடங்களில் கழிவுநீரேற் றம் செய்து பாதாள சாக் கடை திட்டத்தில் திருப்பிவிட முதற்கட்ட பணிகள் தொடங்கப்படும். அனைத்து மாநகராட்சி மேல்நிலை பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அறிமுகம், பள்ளிகளில் புரொஜக்டர்கள் மற்றும் கணணி வசதி செய்யப்படும்.
 
1.03.2013 முதல் மழைநீர் சேமிப்பு திட்டம் கட்டாயமாக்கப்படும். பாளை இலந்தகுளத்தில் சூழலியல் பூங்கா அமைக்கப்படும். வேய்ந் தான்குளம் புதிய பஸ்நிலையத்தில் ரூ.75 லட்சம் செல வில் பஸ் நிறுத்தும் இடம், பயணிகள் கூடம், கூடுதல் கழிப்பறைகள் கட்டப்படும். சந்திப்பு பஸ்நிலையத்தில் ரூ.50 லட்சம் செலவில் மேற் கூரை அமைக்கப்படும். ரூ.6.25 கோடியில் அடுக்குமாடி வாகன காப்பகம் அமைக்கப்படும்.

ராமையன்பட்டி உரக்கிடங்கில் ரூ.55 கோடி செல வில் கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டம் துவங்கப்படும். பழையபேட்டை பகுதியில் ரூ.1 கோடி செலவில் எரிவாயு தகனமேடை அமைக்கப்படும். மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதாக மேயர் அறிவித்தார். நேற்றைய கூட்ட தீர்மானங்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச நீதிமன்ற விசா ரணை நடத்தி, போர்குற்றம் புரிந்தவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்க வேண்டும், இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும், தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழ சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும், நெல்லை மாநகராட்சி பகுதியில் தெருவிளக்கு பராமரிப்பு பணியினை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் மீண்டும் டெண்டர் எடுக்கக்கூடாது என்றும் கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.

22வது வார்டு கவுன்சிலர் முகம்மது கமாலுதின் தந்தை சம்சுதீன் மறைவுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பெண் கவுன்சிலர் தர்ணா, வெளிநடப்பு

பட்ஜெட் கூட்டம் குறித்து திமுக உறுப்பினர்களுக்கு முறையான தகவல் கொடுக்கவில்லையென்று கூறி திமுக கவுன்சிலர்கள் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், தச்சை சுப்பிரமணியன், பிரான்சிஸ், முகம்மது கமாலுதீன், பாலன் என்ற ராஜா, பாஸ்கரன், வசந்தா உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். 11வது வார்டு கவுன்சிலர் வசந்தா தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் கவுன்சிலர் ஆளுங்கட்சி செல்வாக்கு தனக்கு உள்ளது என்று கூறி, தன்னை மக்கள் பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும், மேயர் இதில் தலையிட்டு வார்டுக்கு செய்ய வேண்டிய அவசிய பணிகளை செய்து தரவேண்டும் என்று கூறி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று மேயர் கூறினார்.

6வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியன் கூறுகையில், கட்சி பாகுபாடின்றி கவுன்சிலர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், 11வது வார்டில் கவுன்சிலருக்கு எதிராக செயல்படும் தனிநபருக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்றார். வார்டுக்கு மேயர் விசிட் வரும்போது கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தேமுதிக கவுன்சிலர் தானேஸ்வரன் கூறினார். இவ்வாறு விவாதம் நடந்தது.