உடுமலை நகராட்சியில் ரூ.17.13கோடி பட்ஜெட் தாக்கல்

Saturday, 30 March 2013 11:48 administrator நாளிதழ்௧ள் - நிதி மேலாண்மை
Print
தினகரன்        30.03.2013

உடுமலை நகராட்சியில் ரூ.17.13கோடி பட்ஜெட் தாக்கல்


உடுமலை: உடுமலை நகராட்சி கூட்டத்தில் ரூ.17.13 கோடிக்கான பட்ஜெட்டை தலைவர் தாக்கல் செய்தார்.

உடுமலை நகராட்சி கூட்டம் தலைவர் ஷோபனா தலைமையில் நடந்தது. இதில் 2013-14ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நகராட்சி தலைவர் ஷோபனா தாக்கல் செய்தார். அதன் விபரம் வருமாறு : 2013-14ம் ஆண்டிற்கான உத்தேச வரவு ரூ.17.13 கோடி, உத்தேச செலவு ரூ.12.71 கோடி.

இதில் மீதமுள்ள ரூ.4.52 கோடியில் உபரி பட்ஜெட் தயாரிக்கப்பட்டது. அதில் பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து, துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க ரூ.6 லட்சம், தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கொசு ஒழிப்பு மருந்துகள், இயந்திரங்கள் வாங்க ரூ.5 லட்சம் மற்றும் பொது சுகாதார பணிகளின் தொடர் செலவினத்திற்கு ரூ.ஒரு கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உடுமலையை பசுமையான நகரமாக மாற்ற பூங்காக்கள் அமைக்கவும், பராமரிக்கவும் ரூ.45 லட்சம், மரபுசாரா எரிசக்தி மூலம் சோலார் விளக்குகள் அமைக்க ரூ.50 லட்சம், தெரு விளக்கு அமைக்க ரூ.10 லட்சம், குடிநீர் குழாய் புனரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிக்காக ரூ.28.10 லட்சம் ஒதுக்கப் பட்டுள்ளது.

மேலும் நகர மேம்பாட்டிற்காகவும், மக்கள் சுகாதார வாழ்விற்காகவும் பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ள ரூ.56.07 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.