திருப்பூர் மாநகராட்சியில் ரூ.15½ கோடியில் புதிய தார்சாலை அமைக்க பூமி பூஜை

Monday, 16 December 2013 08:56 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print

தினத்தந்தி            16.12.2013

திருப்பூர் மாநகராட்சியில் ரூ.15½ கோடியில் புதிய தார்சாலை அமைக்க பூமி பூஜை

திருப்பூர் மாநகராட்சியில் ரூ.15½ கோடியில் புதிய தார்சாலைகள் அமைப் பதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது.

பூமி பூஜை

திருப்பூர் மாநகராட்சியில் 3-வது மற்றும் 4-வது மண்டல பகுதியில் சேதமடைந்த தார் சாலைகளை தமிழ்நாடு நகர் புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மேயர் விசாலாட்சி தலைமை தாங்கினார். கமிஷ னர் செல்வராஜ், துணைமேயர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக வனத்துறை அமைச் சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்தார். விழா வில் மண்டல தலைவர்கள் முத்துச்சாமி, கிருத்திகா, கவுன்சிலர் கீதாஆறுமுகம், மாநகர பொறியாளர் ரவி, உதவி கமிஷனர்கள் கண்ணன், செல்வவிநாயகம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ரூ. 15½ கோடி

3-வது மண்டலத்தில் உள்ள 31-வது வார்டு முதல் 45-வது வார்டு வரை 15 வார்டுகளிலும் மொத்தம் 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.8 கோடியே 70 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் புதிய தார்சாலை அமைத்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுபோல் 4-வது மண்டலத்தில் உள்ள 46-வது வார்டு முதல் 60-வது வார்டு வரை (49, 59-வது வார்டுகள் தவிர) 13 வார்டுகளில் மொத்தம் 13 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.6 கோடியே 90 லட்சம் மதிப்பில் தார்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.