மாநகராட்சி 4வது மண்டலத்தில் ரூ2.28 கோடியில் தார்ச் சாலை

Friday, 24 January 2014 11:41 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print

தினகரன்            24.01.2014

மாநகராட்சி 4வது மண்டலத்தில் ரூ2.28 கோடியில் தார்ச் சாலை

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி 4வது மண்டல பகுதியில் தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு சேவை நிதி கழகத்தின் சார்பில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டப்பணியால் மோசமான நிலையில் உள்ள ரோடுகளை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 46வது வார்டு பகுதியில் சரவணபவ நகர் பகுதியில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பாரதிபாளையம் முதல் வீதி, நல்லத்தம்பி நகர் ஆகிய பகுதிகளில் 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருவள்ளுவர் நகர், நிட்இந்தியா ரோடு ஆகிய பகுதிகளில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட் டிலும் சாலைகள், மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படவுள்ள.

 47வது வார்டு வசந்தம் நகர் பகுதியில் 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டி லும், பாரதிநகர் முதல்வீதி, 2வது வீதியில் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பாரதிநகர் 3வது வீதி, 7வது வீதி ஆகிய பகுதிகளில் 34 லட்சம் ரூபாய் மதிப் பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

4வது மண்டல பகுதியில் உள்ள இருவார்டுகளிலும் 2.28 கோடி ரூபாய் மதிப் பீட்டில் தார்சாலைகள், மழைநீர்வடிகால் அமைத் தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி பாரதிபாளையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் தலைமை தாங்கி பணியைத் தொடங்கி வைத்தார். துணை மேயர் பழனிச்சாமி, மண்டலக்குழு தலைவர்கள் காஞ்சனா பழனிச்சாமி, மனோகரன், ஆணையாளர் விஜயலட்சுமி, பொறியாளர் ஆறுமுகம், உதவி ஆணை யர் விஜயகுமார், கவுன்சிலர்கள் ஈஸ்வரமூர்த்தி, எம்.கே.ராஜா, கவிதாரமேஷ், சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.