கூடலூர் அண்ணா நகரில் ரூ.5 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைப்பு

Wednesday, 29 January 2014 11:41 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print

தினத்தந்தி          29.01.2014 

கூடலூர் அண்ணா நகரில் ரூ.5 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைப்பு

கூடலூர் அண்ணா நகரில் ரூ.5 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

பழுதடைந்த சாலை

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர்வயல் பகுதியில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் குடியிருந்து வருகின்ற னர். இங்கு இருந்து அண்ணா நகருக்கு சாலை செல்கிறது. கடந்த காலகட்டங்களில் குறிப்பிட்ட சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் சேறும் சகதியும் நிறைந்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் வாகனங்களும் இயக்க முடியாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இதனால் சாலையை சீரமைத்து தர வேண்டும் என கூடலூர் நகராட்சி நிர்வாகத் திடம் பொதுமக்கள் முறையீட்டனர்.

ரூ.5 லட்சத்தில் சிமெண்டு சாலை

இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் ரூ.5 லட்சம் நிதியை ஒதுக்கியது. பின்னர் கோத்தர்வயல் மெயின் ரோட்டில் இருந்து அண்ணா நகர் வரை 130 மீட்டர் தூரம் புதியதாக சிமெண்டு சாலை அமைக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போது இந்த பணிகள் நிறைவு பெற்று உள்ளன. இதனால் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இது குறித்து அப்பகுதி வார்டு கவுன்சிலர் தோமஸ் கூறும் போது, நீண்ட காலமாக அண்ணா நகர் சாலை பழுத டைந்து கிடந்தது. இதனால் பொதுமக்கள் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதியதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.