"திருவாரூரில் ரூ. 9.93 கோடியில் புதிய தார்ச் சாலைகள் அமைக்கப்படும்'

Thursday, 30 January 2014 11:44 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print

தினமணி                30.01.2014

"திருவாரூரில் ரூ. 9.93 கோடியில் புதிய தார்ச் சாலைகள் அமைக்கப்படும்'

திருவாரூர் நகராட்சிப் பகுதிகளில் ரூ. 9.93 கோடியில் 37 புதி ய தார்ச் சாலைகள் அமைக்கப்படவுள்ளன என்றார் நகராட்சித் தலைவர் வே. ரவிச்சந்திரன். திருவாரூரில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

நகரில் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க கேக்கரை, புதிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, புதுத்தெரு, கொடிக்கால்பாளையம் ஆகிய 10 இடங்களில் ரூ. 10 லட்சத்தில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி இணைப்புச் சாலை சின்னப்பள்ளி வாசல், கும்பகோணம் - திருவாரூர் துர்காலயா சாலை இணைப்புப் பகுதியில் ரூ. 8 லட்சத்தில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்படவுள்ளது.

 இதேபோல புதியப் பேருந்து நிலையத்தில் 24 பேருந்துள் நிற்கும் வகையில் இடம் அமைக்கப்பட்டு அப்பகுதிகளில் ரூ. 6 கோடி செலவில் சூரிய ஒளி மின்கம்பம் அமைக்கப்படும்.

சாதுசுப்பையா நகர், தென்றல் நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 9.93 கோடியில் மழை நீர் வடிகால் வசதியுடன் 37 புதிய தார் சாலைகள் அமைப்படவுள்ளன.

 நகராட்சிப் பகுதிக்குள் செயல்படும் 1 முதல் 5 வரையிலான நான்கு பள்ளிகள், 1 முதல் 8 வரையிலான இரண்டு பள்ளிகள், 6 முதல் எஸ்எஸ்எல்சி வகுப்பு வரையிலான ஒரு பள்ளி என 7 பள்ளிகளுக்கு புதியக் கட்டடம், கழிவறை, குடிநீர் வசதி அமைக்க ரூ. 60 லட்சத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதை சாக்கடைப் பணிகள் பிப்ரவரி மாத இறுதிக்குள் நிறைவடைந்து விடும்.

எனவே பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனத்தினர் புதை சாக்கடை இணைப்புப் பணிக்கு பிப். 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.