பாபநாசம் பேரூராட்சி கூட்டம் ரூ.26 லட்சத்தில் தார்சாலை அமைக்க தீர்மானம்

Friday, 31 January 2014 11:17 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print

தினகரன்                30.01.2014

பாபநாசம் பேரூராட்சி கூட்டம் ரூ.26 லட்சத்தில் தார்சாலை அமைக்க தீர்மானம்

பாபநாசம், : பாபநாசம் பேரூராட்சி கூட்டத்தில், ரூ.26லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 பாபநாசம் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செயல் அலுவலர் மனோகர், துணை தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். திருப்பாலத்துறை எஸ்.பி.ஜி மிஷின் தெரு, காளியம்மன் கோயில் தெருக்களில் 2013-14 நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைப்பது, பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 2013-14ம் ஆண்டு ரூ.1.25 லட்சம் மதிப்பீட்டில் அரையபுரம் மேட்டுத் தெருவில் தார்சாலை அமைப்பது, புதிய பேருந்து நிலையத்தில் நேரங் காப்பாளர் அறையும், பொது கட்டண கழிப்பறை சீரமைத்தல் பணிக்கு ரூ.2.78 மதிப்பில் ஒதுக்கீடு செய்வது, பாபநாசம் பேரூராட்சி புதிய அலுவலகத்தில் விற்பனை வரி அலுவலகம் இயங்க பேரூராட்சி இயக்குநர் அனுமதி பெற்று வாடகைக்கு விடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், உறுப்பினர்கள் மேரிஜோஸ்பின், ஜார்ஜ், சேகர், செல்வி, சுகன்யா, ஜெனட் ஆனந்தி, ஜெயராம், சபிலா, செல்வ முத்துக்குமார், அறிவழகன், சீனிவாசன், சுமதி, பால கிருஷ்ணன், சின்ன உதயா, சுகாதார ஆய்வாளர் செந்தில், குமரகுரு ஆகியோர் கலந்து கொண்டனர். இளநிலை உதவியாளர் ராமதாஸ் நன்றி கூறினார்.