மாநகராட்சி பள்ளியில் கணினி மயமாக்கப்பட்ட நூலகம்

Thursday, 05 September 2013 09:39 administrator நாளிதழ்௧ள் - ௧ல்வி
Print

தினகரன்              05.09.2013

மாநகராட்சி பள்ளியில் கணினி மயமாக்கப்பட்ட நூலகம்

மதுரை: மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், புதிதாக கற்றறிந்து, புத்தகங்களை நேசிக்கும் ஆர்வத்தை வளர்க்கவும் மதுரையில் உள்ள மாநகராட்சிப் பள்ளி யில் ‘குளுகுளு’ ஏசி வசதியுடன் கணினி மயமாக்கப்பட்ட நூலகம் இயங்கி வருகிறது.

மதுரை ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் இருக்கிறது பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி  மேல்நிலைப்பள்ளி. நகரின் மற்ற பள்ளிகளை விட இப் பள்ளி நூலகம் தனித்துவம் கொண்டிருக்கிறது.  ஓட்டை உடைசல் இருக்கை கள், அழுக்கடைந்த அறை க்குள் தூசு படிந்த ரேக்குகள், அட்டை நைந்த புத்தகங்கள் என பார்த்துப் பழகிய நூலகங்கள் மத்தியில் இந்நூலகம் பளிச்சென்று இருக்கிறது.  வரிசையிட்டு அடுக் கிய புத்தகங்களுடன், கம்ப்யூட்டரில் வகைப்படுத்தி வைத்தும், அமர்ந்து படித் துச் செல்கிற ஆசையை ஊற்றெடுக்கும் வகையிலும் அநேக வசதிகள் இங்கிருக்கின்றன. குளுகுளு ஏசி வசதி, சுழற்சி இருக்கைகள் மட்டுமல் லாது, பல்வேறு தலைப்புக ளில் 7 ஆயிரத்திற்கும் அதிக அரிய புத்தகங்களும் இருக்கிறது.

பள்ளி தலைமையாசிரியை முருகேஸ்வரி கூறு கையில், ‘Ôவெறும் 400 புத்தகங்களுடன் 2008ல் இந்நூலகம் துவக்கப்பட்டது. நேர அட்டவணையில் மதிப்புக் கல்விக்கென வாரம் 5 பீரியட்களை கல்வித்துறை  ஒதுக்கியுள்ளது. இசை, தையல், நீதிபோதனைக்கு 3 பீரியட் போக, மீதி 2 பீரியட்களை நூலகக் கல்வி  என்றே பிரித்து வைத்திருக்கிறோம். இந்நேரத்தில் நூலகம் வரும் மாணவர்கள் முறைப்படி கையெழுத் திட்டு, பாடவாரியாக பிரித்து வைத்திருக்கும் புத்தகங்களை எடுத்து படிக்க லாம். 40 நிமிடத்தில் 30 நிமிடங்கள் வாசித்து முடித்ததும், மாணவர்களிடம் படித்ததில் பிடித்ததைக் கேட்கிறோம். சரியான பதில் தரும் மாணவருக்கு உடனடி பரிசுகளும் தருகிறோம். ஊடகங்களில் வெளிவந்துள்ள புதிய செய்திகள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறோம். இவை மாணவர் கல்வித்திறனை மேம்படுத்துகிறது,’Õ என்றார்.

பள்ளி நூலகர் கனகதுர்கா, நூலகத்துறையில் உயர்கல்வியுடன், டெல்லி மத்திய நூலகத்தில் சிறப்புப்  பயிற்சியும் பெற்றுள்ளார். கனகதுர்கா கூறுகையில், ‘Ôபேச்சு, கட்டுரைப் போட்டிகளுக்கும், போட்டித்தேர்வுகளுக்கும் நூலகம் வரும் மாணவர்கள் எளிதாக தயாராகி விடுகின்றனர். Ôபடித்தால் பரிசுÕ என்பதும் மாணவர்களிடம் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்திருக்கி றது. ஆண்டுக்கு ஆண்டு  நன்கொடையாளர்களால் புத்தகங்கள் எண்ணிக் கையை அதிகரித்து வருகி றோம். சங்கத்தமிழ் துவங்கி  நவீன அறிவியல் வரை தேர்ந்தெடுத்த புத்தகங்கள் இங்கிருக்கின்றன,’Õ என்றார்.

பள்ளி மாணவர்கள் கூறுகையில், ‘இனிமையான வாசிப்பு அனுபவத்தை எங்கள் பள்ளி நூலகம் தருகிறது. வகுப்பறையை விட பெரும் கல்வியை இந்த நூலக அறைக்குள்தான் கற்கிறோம்,’Õ என்றனர்.