மாநகராட்சியில் ‘வெப் கேமரா’ அலுவலக நடவடிக்கைகளை கண்காணிக்கிறார் கமிஷனர்

Wednesday, 08 December 2010 05:29 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினகரன்             07.12.2010

மாநகராட்சியில் வெப் கேமராஅலுவலக நடவடிக்கைகளை கண்காணிக்கிறார் கமிஷனர்

கோவை, டிச. 8: மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வெப் கேமரா வைத்து, கமிஷ னர் கண்காணிப்பதால் அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத் தில், கமிஷனர் அறை, துணை கமிஷனர் அறை, நகரமைப்பு பிரிவு, பொறியியல் பிரிவு, கல்விப்பிரிவு, ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்ட பிரிவு, மக்கள் தொ டர்பு அலுவலகம், நிர்வாக அலுவலகம், பதிவேடு அறை, தேர்தல் பிரிவு, கருவூலம் செயல்படுகிறது.

இந்த அலுவலகங்களின் உள், வெளிப்பகுதி தெரியும் வகையில் வெப் கேமரா வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வளாகத்தில், 50 கே மரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவின் மொத்த செயல்பாடுகளை மாநகரா ட்சி கமிஷனர், தன் அறையில் உள்ள கம்யூட்டர் மானிட்ட ரில் பார்க்கும் வகையில் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் அலுவலக நடவடிக்கைகளைமானிட்டரில் காணும் வழக்கத்தை வைத்துள்ளார். அவர் வெளியூர் சென்றாலும் ரிக்கார்டுசெய்த விவரங்களை காண தவறுவதில்லை.

எந்த அதிகாரி அலுவலகத்தில் என்ன வேலை செய் தார், எப்போது வெளியே போனார், எப்போது வந் தார், அவரின் பேச்சு, செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார். வெப் கேமராவில் பதிவாகும் காட் சிகள் அடிப்படை யில், அதிரடியாக விசாரணையும் நடத்துகிறார். அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களிடம் பேசிய விவரங்கள், பொதுமக்களி டம் பேசிய விவரங்களை கமிஷனர் ஆதாரபூர்வமாக தெரிந்து விசாரிப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அலுவலகத்தில் இருந்தால் பிரச் னை ஏற்படும் என அதிகாரி கள் சிலர் வெளியே சென்று விடுகின்றனர். ஒப்பந்தாரர் கள், பணி தொடர்பான விவரங்களை சிலர், தங்கள் வாகனத்தில் வைத்தே பேசுகின்றனர். கோவை மாவட்டத்தில் எந்த அரசு துறையி லும், அரசு சார்பு துறை அலு வலகங்களிலும் வெப் கேமரா கண்காணிப்பு நடவடிக்கை கிடையாது. மாநகராட்சியில் கேமரா வைத்துள்ள விவகா ரம் மாநகராட்சி மன்றத்தி லும் பிரச்னையாக பேசப்பட்டது. இதனை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.