மாநகராட்சி பள்ளி குழந்தைகளின் கல்வித்திறன் மேம்படுத்த புதிய சாப்ட்வேர்

Saturday, 20 April 2013 05:59 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print
தினகரன்         20.04.2013

மாநகராட்சி பள்ளி குழந்தைகளின் கல்வித்திறன் மேம்படுத்த புதிய சாப்ட்வேர்

கோவை, : கோவை மாநகராட்சி பள்ளி குழந்தைகளின் கல்வித்திறனை மேம்படுத்த புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் 80க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயிலுகின்றனர். இவர்களது கல்வித்திறனை கணினி வழியாக மேம்படுத்த புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் செயல்விளக்கம் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. மேயர் செ.ம.வேலுசாமி, கமிஷனர் லதா ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் செயல்விளக்கம் செய்துகாண்பித்தனர்.

இந்த புதிய சாப்ட்வேர் உதவியுடன் ஒரு குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல், படித்துமுடித்துவிட்டு வெளியே செல்லும் வரை நன்னடத்தை, முன்னேற்றத்துக்கு தேவையான வழிமுறைகள் கற்றுத்தரப்படுகிறது. வினா-வங்கி, வினாத்தாள் உள்ளிட்ட மாடல்களும் உருவாக்கி கொடுக்கப்படுகிறது. பெற்றோர் வீட்டில் இருந்தபடியே தங்களது குழந்தைகளின் கல்வித்திறனை கம்ப்யூட்டர்வாயிலாக அறிந்து  கொள்ளும் வகையில் இந்த சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், கோவை மாநகராட்சி கல்வித்துறையில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.