குப்பைகள் அகற்றுவதைக் கண்காணிக்க நவீன தொழில்நுட்பம்: மாநகராட்சி ஏற்பாடு

Wednesday, 21 August 2013 07:33 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினமணி            21.08.2013

குப்பைகள் அகற்றுவதைக் கண்காணிக்க நவீன தொழில்நுட்பம்: மாநகராட்சி ஏற்பாடு

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றுவதைக் கண்காணிக்க நவீன தொழில்நுட்ப முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகளில், குப்பைகள் சரியான நேரத்தில் அகற்றப்படுவதைக் கண்காணிக்கவும், முறைபடுத்தவும் மென்பொருள் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் படி, முறையாக குப்பைகள் அகற்றப்பட்ட தொட்டிகள் எவை, குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கும் தொட்டிகள் எவை என்பதை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்தே இனம் பிரித்து கண்காணிக்க முடியும்.

முதல் கட்டமாக இந்த திட்டம் 9, 10 மற்றும் 13-வது மண்டலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. குப்பைத் தொட்டிகளின் எண்ணிக்கை மற்றும் குப்பை அகற்றப்படும் நேரம் உள்ளிட்ட தகவல்களை ஜ்ஜ்ஜ்.ஸ்ரீம்ள்ஜ்.ஸ்ரீர்.ண்ய் என்ற இணையதளப் பக்கத்தின் வழியாக தெரிந்து கொள்ளலாம். குப்பை அகற்றுவது குறித்த புகார்களுக்கு 1800 425 1566 மற்றும் 1913 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Last Updated on Wednesday, 21 August 2013 07:38