இணைப்பை துண்டிக்காமல் இருக்க உடனடியாக வரி செலுத்த வேண்டும்: குடிநீர் வாரியம்

Thursday, 22 January 2015 07:25 administrator நாளிதழ்௧ள் - குடீநீர் வழங்௧ல்
Print

தினமணி      22.01.2015

இணைப்பை துண்டிக்காமல் இருக்க உடனடியாக வரி செலுத்த வேண்டும்: குடிநீர் வாரியம்

குடிநீர் இணைப்பைத் துண்டிக்காமல் இருக்க உடனடியாக குடிநீர் வரியைச் செலுத்த வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி: சென்னை மாநகராட்சி சொத்து வரியாக நிர்ணயித்துள்ள தொகையில் 7 சதவீத தொகையைக் குடிநீர், கழிவுநீர் வரியாக குடிநீர் வாரியத்துக்குச் செலுத்த வேண்டும். குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெறாவிட்டாலும் இந்த தொகையை பொதுமக்கள் செலுத்த வேண்டும்.

சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் சொத்து வரியுடன் சேர்த்து குடிநீர் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனிமேல் இந்த வரியை தனியாக குடிநீர் வாரியத்துக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டும்.

சென்னையில் நுகர்வோர்கள் அனைவரும் நிலுவை தொகை, நடப்புக் கேட்புத் தொகைகளை உடனடியாக செலுத்தி, கூடுதல் வரிவிதிப்பு, இணைப்பு துண்டிப்பைத் தவிர்க்க வேண்டும்.

சென்னையில் நீண்ட நாள்களாக குடிநீர் வரியை செலுத்த தவரும் வணிக வளாகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகத்தில் நிலுவைத் தொகை செலுத்தத் தவறியவர்களுக்கு குடிநீர் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் 15 நாள்களுக்குள் வரி செலுத்த வேண்டும். இப்போது நிலுவையில் உள்ள தொகையை பொதுமக்கள் உடனியாக செலுத்த வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.