சென்னை குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய புறநகர் ஏரிகளின் நீரை பயன்படுத்த ஆய்வு: செம்பரம்பாக்கத்துக்கு கொண்டு செல்ல திட்டம்

Friday, 03 March 2017 10:10 administrator நாளிதழ்௧ள் - குடீநீர் வழங்௧ல்
Print
தி  இந்து
 
சென்னை குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய புறநகர் ஏரிகளின் நீரை பயன்படுத்த ஆய்வு: செம்பரம்பாக்கத்துக்கு கொண்டு செல்ல திட்டம்
 
சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக மணிமங்கலம் பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் மூலம் சர்வே எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக மணிமங்கலம் பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் மூலம் சர்வே எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
 
சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக மணிமங்கலம் பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் மூலம் சர்வே எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 சென்னை நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக புறநகர் பகுதிகளில் உள்ள ஏரி தண்ணீரை பயன்படுத்துவது குறித்து சென்னை குடிநீர் வாரியம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் புழல், பூண்டி, சோழவரம், செம் பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வறண்டு கிடக்கின்றன. இந்த 4 ஏரிகளின் மொத்த கொள் ளளவு 11,057 மில்லியன் கனஅடி. நேற்றைய நிலவரப்படி மொத் தம்1,709 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டு இதேநாளில் 4 ஏரிகளின் நீர்இருப்பு 7,991 மில்லியன் கனஅடியாக இருந்தது.

ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதால் சென்னையில் இப்போதே பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கோடைக்காலத்தில் சென்னை நகரின் தண்ணீர் தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, குடிநீர் தேவையை சமாளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக் கைகளை குடிநீர் வாரியம் மேற் கொண்டு வருகிறது.

சென்னையில் புறநகர்ப் பகுதி களில் உள்ள கல்குவாரிகளில் இருக்கும் தண்ணீர் மக்கள் குடிப் பதற்கு உகந்ததா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை புறநகரில் உள்ள தாம்பரம், பல்லாவரம், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, திருப்போரூர் போன்ற பகுதியில் உள்ள ஏரிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாசனத்துக்கு பயனற்றதாக உள்ள ஏரிகளின் தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட புறநகர் ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லவும் சர்வே நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னையில் கோடை காலத்தை சமாளிக்க குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கல்குவாரி நீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஏரிகளின் நீர் இருப்பு, அதன் தரம், எவ்வளவு தண்ணீரை எடுத்து பயன்படுத்த லாம், உள்ளூர் தேவைக்கு போக மீதி குழாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்லலாமா என பல வழிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டிய பாதைகள் குறித்த சர்வேயும் நடைபெறுகிறது. அனைத்து ஆய்வுகளையும் மேற் கொண்டு அரசுக்கு ஓரிரு வாரங் களில் அறிக்கை தாக்கல் செய்யப் படும் அரசின் முடிவுக்கு இணங்க திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.