மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளி குடிநீர் சுத்திகரிப்பு திட்டம்

Tuesday, 24 August 2010 07:49 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினகரன் 24.08.2010

மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளி குடிநீர் சுத்திகரிப்பு திட்டம்

புனே, ஆக. 24: மாணவ, மாணவிகளின் நலன் கருதி, குடிநீரை சுத்தம் செய்ய பள்ளிகளுக்கு சோடியம் ஹைபோகுளோரைட் கிரேடு 1’ திரவத்தை வழங்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளிகளில் தொட்டியில் சேமித்து வைக்கப்படும் குடிநீரைதான் மாணவ, மாணவிகள் பருகி வருகின் றனர். தொட்டியில் சேமிக்கப் படும் குடிநீரில் கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்கள் இருக்க கூடும். இதை பருகும் மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் தொடர்பான நோய் கள் தாக்க வாய்ப்பிருக் கிறது.

இதை கருத்தில் கொண்டு மாணவ, மாணவிகளின் நலன் கருதி குடிநீரை சுத்தம் செய்ய பள்ளிகளுக்கு சுத்தி கரிப்பு திரவத்தை வழங்க மாநில அரசு முடிவு செய்து ள்ளது. சோடியம் ஹைபோகு ளோரைட் கிரேடு 1 (மெடி&குளோர் எம்) என் னும் திரவத்தை கலப்பதின் மூலம், குடிநீரில் உள்ள கிரு மிகள் மற்றும் நுண்ணுயிரிகள் அழிந்துவிடும்.

மேலும் இத்திரவம் குடிநீரை சுத்தம் செய்யுமே தவிர பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது. இந்த திரவத்தை அனைத்து பள்ளிகளுக்கு வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளுக்கு திரவத்தை வினியோகம் செய்வது மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு குறித்து எடுத்துரைப்பதற் காக, புனே பள்ளி கல்வி இயக்குனரை(ஆரம்ப கல்வி) இத்திட்டத்தின் ஒருங் கிணைப்பு ஆணையாளராக அரசு நியமித்துள்ளது. 100 மில்லி திரவம் அடங்கிய குப்பிகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. அடுத்த 10 நாட்களில் குப்பிகள் பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்படும்.

பள்ளி குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்துக்காக மாநில அரசு ரூ2.32 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை கொண்டு சுமார் 14.09 லட்சம் திரவ குப்பிகள் வாங்கப்படும். மகாராஷ்டிரா சிறுதொழில் நிறுவனம் மேம்பாட்டு கழகத்தின் அங்கீகரிக்கப் பட்ட ஏஜென்டிடம் இருந்து திரவ குப்பிகள் ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்பட இருக்கிறது. மேலும் பள்ளி குடிநீர் சுத்திகரிப்பு திட்டம் குறித்து மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகத்துக்கு அரசாணை அனுப்பி வைக்கப்பட் டுள்ளது.