15 இடங்களில் போர்வெல் உப்புநீரை குடிநீராக்க ரூ 1.50 கோடி ஒதுக்கீடு

Thursday, 09 September 2010 10:30 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினமணி 09.09.2010

15 இடங்களில் போர்வெல் உப்புநீரை குடிநீராக்க ரூ 1.50 கோடி ஒதுக்கீடு

மதுரை, செப். 8: மதுரையில் 15 இடங்களில் ஆழ்துளைக் கிணறு (போர்வெல்) மூலம் வரும் உப்புநீரைக் குடிநீராக மாற்றுவதற்கு ரூ 1.50 கோடி மத்திய அமைச்சர் மு..அழகிரியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரையில் முக்கியப் பகுதிகளான மஞ்சள்மேடு காலனி, கோமஸ்பாளையும் (ஆரப்பாளையும் தண்ணீர்த்தொட்டி), பசுமலை, அண்ணா நகர், பெரியார் பஸ் நிலையம் அருகே திடீர் நகர், சுப்பிரமணியபுரம், கரும்பாலை உள்ளிட்ட 15 இடங்களில் ஆழ்துளைக் கிணறு மூலம் வரும் உப்புநீரைக் குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தலா ரூ 10 லட்சம் வீதம் மொத்தம் ரூ 1.50 கோடியை மத்திய அமைச்சர் மு..அழகிரி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்துள்ளார். இதேபோல டி.வி.எஸ். நகர் பூங்காவில் மேம்பாட்டுப் பணிக்காக ரூ 40 லட்சமும், ஆரப்பாளையம், கோமஸ்பாளையத்தில் புதிதாக கட்டப்பட உள்ள சமுதாயக்கூடத்துக்கு ரூ 5 லட்சமும் ஒதுக்கீடு செய்துள்ளார். இப்பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் தொடங்கப்பட்டு இரண்டு மாத காலத்திற்குள் முடிக்கப்படும் என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.