ரூ3 கோடியில் மறைமலை நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

Tuesday, 26 October 2010 06:42 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினகரன்                26.10.2010

ரூ3 கோடியில் மறைமலை நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

செங்கல்பட்டு, அக்.26: மறைமலைநகரில் ரூ3 கோடியே 75 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன சுத்திகரிப்பு நிலையத்தை நகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.

மறைமலைநகர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் 6 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் அமலில் உள்ளது. கீழக்கரணை, கூடலூர், ரயில் நகர் ஆகிய பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்தப் பகுதிகளில் வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிக்க ரூ3 கோடியே 75 லட்சம் செலவில் மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் எதிரே நவீன சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை, நகராட்சி நிர்வாக ஆணையர் செந்தில்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆணையர் மக்வானா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். நகராட்சி தலைவர் சசிகலா, துணைத்தலைவர் சண்முகம், நகராட்சி பொறியாளர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து, நகராட்சி தலைவர் சசிகலா கூறுகையில், ‘மறைமலைநகர் தொழிற்பேட்டையில் 250 தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தனித்தனியாக சுத்திகரிக்க சுத்திரிகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது 6 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. 21 வார்டுகளிலும் பாதாள சாக்கடை அமைக்கப்படும். இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுஎன்றார். மறைமலைநகரில் நவீன சுத்திகரிப்பு நிலையத்தை நகராட்சி நிர்வாக ஆணையர் செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார்.