கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச யோகா பயிற்சி

Thursday, 04 September 2014 11:41 administrator நாளிதழ்௧ள் - ம௧ளிர் நலம் / மேம்பாடு
Print

தினமணி      04.09.2014

கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச யோகா பயிற்சி

    புகைப்படங்கள்

மாநகராட்சி சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்து பார்வையிட்ட (இடமிருந்து) துணை ஆணையர் (சுகாதாரம்) ஆனந்த், மக்களவை உறுப்பினர் ஜெயவர்தன், மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பென்ஜமின்.

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவசமாக யோகா பயிற்சி அளிக்கும் திட்டம் சென்னையில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்ட செய்தி:

அறுவை சிகிச்சை பிரசவங்களே தற்போது அதிக அளவில் நடைபெறுகின்றன. யோகா பயிற்சியால் கர்ப்பிணிப் பெண்களின் இடுப்பு எலும்பு தசைகள் வலுப்பெறுவதுடன், மூச்சுப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் சுகப் பிரசவ வாய்ப்புகள் அதிகரிக்கும்.

நிகழ் நிதியாண்டின் மாநகராட்சி பட்ஜெட்டில், சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவசமாக யோகா பயிற்சியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, வடபழனியில் உள்ள 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனையில் இலவச யோகா பயிற்சித் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

அனைத்து மண்டலங்களிலும் உள்ள 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனையில் பிரதி செவ்வாய், வியாழக்கிழமைகளில் காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை தகுதியான ஆசிரியரின் வழிகாட்டுதலின் படி இலவச யோகா பயிற்சி அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், சம்பந்தபட்ட மண்டலங்களிலுள்ள மகப்பேறு மருத்துவமனை அலுவலரை அணுகலாம்.