வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு இலவச தொழில் பயிற்சி

Wednesday, 10 November 2010 10:46 administrator நாளிதழ்௧ள் - வறுமை ஒழிப்பு
Print

தினமணி               10.11.2010

வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு இலவச தொழில் பயிற்சி

மானாமதுரை, நவ. 9: சிவகங்கை மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இது குறித்து, பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநர் தெய்வநாயகம் தெரிவித்திருப்பதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 பேரூராட்சிகளில் 2010-2011-ம் ஆண்டுக்கான சொர்ணகாரி யோஜ்கார் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில், 18 முதல் 35 வயதுக்குள்பட்ட வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தையல், செல்போன் பழுதுபார்த்தல், பிட்டர், மேசன், வயரிங், ரேடியோ மெக்கானிக், ஜே.சி.பி. மெக்கானிக், நர்ஸ், கம்ப்யூட்டர் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இத்திட்டத்தின் கீழ் 104 பேருக்கு பயிற்சி அளிக்க 8. 78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பேரூராட்சிப் பகுதிகளில் 2007-ம் ஆண்டு இறுதி செய்யப்பட்ட வறுமைகோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்களின் பட்டியலில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

தொழில் பயிற்சியில் நர்ஸ், கம்ப்யூட்டர் ஆகியவற்றுக்கு மட்டும் கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற பயிற்சிகளுக்கு கல்வித் தகுதி தேவையில்லை.

மாற்றுத் திறனாளிகளுக்கு குறியீட்டில் 3 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதி பேரூராட்சி அலுவலகங்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.