வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கு இலவச தொழில் பயிற்சி

Thursday, 23 July 2009 09:21 administrator நாளிதழ்௧ள் - வறுமை ஒழிப்பு
Print

தினமணி 23.07.2009

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கு இலவச தொழில் பயிற்சி

22: மாவட்ட மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ்வாழும் வேலைவாய்ப்பற்ற ஆண், பெண்களுக்கு வேலைவாய்ப்புடன்கூடிய இலவச தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஸ்டெனோகிராபி, இண்டர்நேஷனல் ஏர்டிக்கெட்டிங் டிராவல் மேனெஜ்மென்ட், விஷூவல் மீடியா பயிற்சிகளுக்கு கும்பகோணம் பானாதுறை ஸ்டார் தொழில் பயிற்சி நிலையத்தில் ஜூலை 29-ம் தேதி காலை 11 மணிக்கு நேர்காணல் நடைபெறுகிறது.

தையல் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரித்தல் பயிற்சிக்கு கும்பகோணம் கீஸ் தொழில் பயிற்சி நிலையத்தில் மாலை மூன்று மணிக்கு நேர்காணல் நடைபெறுகிறது.

கால் சென்டர், அக்கௌண்டிங் பேக்கேஜ், டி.டி.பி., பயிற்சிகளுக்கு தஞ்சாவூர் மணிமண்டபம் எதிரிலுள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் ஜூலை 30-ம் தேதி காலை 11 முதல் மாலை 4 மணி வரை நேர்காணல் நடைபெறுகிறது.

பயிற்சிகள் மூன்று மாதங்கள் நடைபெறும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, பயிற்சிக்கு வரும் நாள்களுக்கு தினமும் ரூ. 25 வீதம் உதவித் தொகையாக மாதந்தோறும் வழங்கப்படும்.

பயிற்சி பெற்றதற்கான சான்றிதழும், மாவட்ட ஆட்சியரின் கையொப்பத்துடன் வழங்கப்படும்.

பயிற்சி முடித்தவுடன் வேலைவாய்ப்பு வழங்க பயிற்சி நிலையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

பயிற்சி பெற விரும்புவோர் 18 முதல் 35 வயது வரையுள்ளவராக இருத்தல் வேண்டும். ஜூலை 27-ம் தேதிக்குள் திட்ட அலுவலர், மகளிர் திட்டம், சி-5, ராமகிருஷ்ணாபுரம், மணிமண்டபம் அருகில், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும்.