திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Wednesday, 26 June 2013 07:42 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
Print

தினமணி               26.06.2013

திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  திருப்பத்தூர் பேரூராட்சி பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் வரையறுக்கப்பட்ட இடத்திற்கு மேல் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

  ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வட்டாட்சியர் அமிர்தலிங்கம், திருப்பத்தூர் செயல் அலுவலர் சங்கரநாராயணன், பஞ்சாயத்து நில அளவை சார்பு ஆய்வாளர்  ராஜகோபால், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், சார்பு ஆய்வாளர்கள் ஜெயபாண்டியன், நாச்சி ஆகியோர் ஈடுபட்டனர்.

  அக்னி பஜார், சின்னக்கடை வீதி, பெரிய கடை வீதி, வாணியன் கோவில் வீதி, அனுமார் கோவில் வீதி, பேருந்து நிலையம், காந்தி சிலை ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

  இப்பணியில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தங்கதுரை, சுகாதார மேற்பார்வையாளர்கள் பாலச்சந்திரன், மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் மாலிக், திருப்பதி, இளங்குமரன், அண்ணாத்துரை ஆகியோர் ஈடுபட்டனர்.