வேலூரில் கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Friday, 30 August 2013 07:15 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
Print

தினத்தந்தி            30.08.2013

வேலூரில் கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 

 

 

 

 

 

வேலூரில் கடைகள் முன்பு இருந்த மேற்கூரைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினார்கள்.

ஆக்கிரமிப்புகள்

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகள், மேற்கூரைகள், விளம்பர பலகைகள் அமைத்துள்ளதால் போக்குவரத்து நெரிசல், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதைத்தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் ஜானகி உத்தரவின் பேரில் நேற்று வேலூர் காட்பாடி சாலை, அண்ணா சாலை, பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.

பொக்லைன் எந்திரம் மூலம்

நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாஸ்கரன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வேலூர் கிரீன் சர்க்கிள் முதல் பாகாயம் வரையில் உள்ள காட்பாடி சாலை, ஆரணி ரோடு, அண்ணா சாலை ஆகிய இடங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இதில் கடைகள் முன்பு கால்வாய் மேல் கட்டப்பட்டு இருந்த தரைகள், படிக்கட்டுகள், மேற்கூரைகள், விளம்பர பலகைகள் ஆகியவற்றை அகற்றினர். ஒருசிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்பே தாங்களாகவே ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கூரைகள், பலகைகளை அகற்றி விட்டனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.