கோவை ரத்தினபுரியில் ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன

Thursday, 31 October 2013 06:07 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
Print

தினத்தந்தி          31.10.2013

கோவை ரத்தினபுரியில் ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன

கோவை ரத்தினபுரியில் ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு

கோவை மாநகராட்சி 49–வது வார்டுக்கு உட்பட்ட ரத்தினபுரியில் சுப்பாத்தாள் லே–அவுட் உள்ளது. இங்கு மாநகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், தனது வீட்டின் கழிப்பிட கட்டிடம், மற்றும் சுற்றுச்சுவரை வீட்டு முன்புறத்தில் உள்ள சுமார் 1½ சென்ட் நிலத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டி இருப்பது தெரியந்தது. இதன் மூலம் சாக்கடை கால்வாய் அடைக்கப்பட்டு இருந்தது.

இடித்து அகற்றம்

இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள், அந்த ஆக்கிரமிப்பை அகற்றும்படி கூறியும் சம்பந்தப்பட்ட நபர் ஆக்கிரமிப்பை அகற்ற வில்லை. இந்த நிலையில் நேற்று மாநகராட்சி உதவி கமிஷனர் ரவி, நகரமைப்பு அலுவலர் வரதராஜன், உதவி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் அந்த இடத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து அகற்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.