கிருஷ்ணகிரி நகராட்சியில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான முகாம் தொடக்கம் வார்டு வாரியாக அடுத்த மாதம் 10ந் தேதி வரை நடைபெறும்

Thursday, 28 March 2013 10:49 administrator நாளிதழ்௧ள் - பொதுவானவை௧ள்
Print
தினத்தந்தி        28.03.2013

கிருஷ்ணகிரி நகராட்சியில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான முகாம் தொடக்கம் வார்டு வாரியாக அடுத்த மாதம் 10ந் தேதி வரை நடைபெறும்


கிருஷ்ணகிரி நகராட்சி யில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற் கான பதிவு செய்யும் முகாம் நேற்று தொடங்கி யது. இந்த முகாம் வார்டு வாரியாக அடுத்த மாதம் 10ந் தேதி வரை நடைபெற உள்ளது.

மக்கள் தொகை பதிவேடு

தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான பதிவு செய் யும் முகாம் கிருஷ்ணகிரி நகராட்சியில் நேற்று தொடங் கியது. இதில் 5 வயது முதல் உள்ள அனைத்து குடிமக்களும் தவறாமல் கலந்துகொண்டு தங்களது பதிவினை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள னர்.

கிருஷ்ணகிரி நகராட்சி 1வது வார்டில் நடந்த பதிவு செய்யும் முகாமை நகர்மன்ற தலைவர் தங்கமுத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது நகர மைப்பு அலுவலர் பாஸ்கரன், மேற்பார்வையாளர்கள் சரவணன், முருகன், சண்முகம், தங்கர்சாமி, முரளி ஆகியோர் உடனிருந்தனர்.

ஆவணங்கள்

முகாமில் தங்களது பதிவை பதிவு செய்து கொள்ள குடும்ப அட்டை, வருமான வரி அட்டை, தேசிய வேலை வாய்ப்பு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ் போர்ட் இதில் ஏதாவது ஒன்றை எடுத்து செல்ல வேண் டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முகாம் நடைபெறும் நாள்

கிருஷ்ணகிரி நகராட்சியில் முகாம் நடைபெறும் வார்டு மற்றும் நாள் விவரம் பின் வருமாறு:

1வது வார்டில் 27ந் தேதி முதல் 30ந் தேதி வரையும், 2 மற்றும் 3வது வார்டுகளில் 27ந் தேதி முதல் 29ந் தேதி வரையிலும், 4வது வார்டில் 27ந் தேதி முதல் 30ந் தேதி வரையிலும், 5வது வார்டில் 29ந் தேதி முதல் ஏப்ரல் 3ந் தேதி வரையிலும், 6வது வார்டில் 29ந் தேதி முதல் ஏப்ரல் 1ந் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இதேபோல் 7, 8வது வார்டு களில் 30ந் தேதி முதல் ஏப்ரல் 2ந் தேதி வரையிலும், 9வது வார்டில் 30ந் தேதி முதல் ஏப்ரல் 1ந் தேதி வரையிலும், 10வது வார்டில் 31ந் தேதி முதல் ஏப்ரல் 7ந் தேதி வரை யிலும் இந்த முகாம் நடை பெறுகிறது.

11வது வார்டு

இதே போல் 11வது வார்டில் ஏப்ரல் 1ந் தேதி முதல் 3ந் தேதி வரையிலும், 12வது வார்டு 1ம் தேதி முதல் 5ம் தேதி வரையிலும், 13வது வார்டு 1ம் தேதி முதல் 3ந் தேதி வரை யிலும், 14, 15, 16 ஆகிய வார்டு களில் 1ம் தேதி முதல் 5ந்தேதி வரையிலும், 17 மற்றும் 18வது வார்டுகளில் 1ந் தேதி முதல் 3ந் தேதி வரையிலும், 19வது வார்டில் 3ந் தேதி முதல் 6ந் தேதி வரையிலும், 20, 21, 22 ஆகிய வார்டுகளில் 3ந் தேதி முதல் 7ந் தேதி வரையிலும் இந்த பதிவு செய்யும் முகாம் நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து 23வது வார்டில் 3ந் தேதி முதல் 5ந் தேதி வரையிலும், 24வது வார்டில் 5ந் தேதி முதல் 7ந் தேதி வரையிலும், 25வது வார்டில் 5ந் தேதி முதல் 9ந் தேதி வரையிலும், 26வது வார்டில் 5ந் தேதி முதல் 7ந் தேதி வரையிலும், 27வது வார்டில் 5ந் தேதி முதல் 9ந் தேதி வரையிலும், 28வது வார்டில் 6ந் தேதி முதல் 8ந் தேதி வரையிலும், 29வது வார்டில் 6ந் தேதி முதல் 10ந் தேதி வரையிலும், 30வது வார்டில் 7ந் தேதி முதல் 10ந் தேதி வரையிலும், 31 மற்றும் 32வது வார்டுகளில் 7ந் தேதி முதல் 12ந் தேதி வரை யிலும், 33வது வார்டில் 7ந் தேதி முதல் 10ந் தேதி வரை யிலும் இந்த பதிவு செய்யும் முகாம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.