அழுத்தக் காற்றில் இயங்கும் வாகனம்: எஸ்.கே.ஆர். கல்லூரி மாணவர்கள் சாதனை

Wednesday, 22 May 2013 06:07 administrator நாளிதழ்௧ள் - பொதுவானவை௧ள்
Print
தினமணி         22.05.2013

அழுத்தக் காற்றில் இயங்கும் வாகனம்: எஸ்.கே.ஆர். கல்லூரி மாணவர்கள் சாதனை


சென்னை பூந்தமல்லியில் உள்ள எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் அழுத்தக் காற்று மூலம் இயங்கும் என்ஜினைக் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் என்ஜின்கள் வெளியிடும் கார்பன் மோனாக்சைடு வாயுவால் காற்று மண்டலம் மாசடைகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் டி.கார்த்திகேயன், ஆர். சக்தி, பி.பாபு ஆகியோர் சுற்றுச்சூழலுக்கு சாதகமான என்ஜினைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இம்மாணவர்கள், அழுத்தக் காற்று மூலம் இயங்கும் என்ஜினைக் கண்டுபிடித்தனர்.

இந்தமுறையில் இயங்கும் என்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்களை இயக்க, திரவ எரிபொருளைக் கொண்டு இயங்கும் வாகனங்களை இயக்க ஆகும் செலவில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே ஆகும்.

இந்த வாகனங்களுக்கான பராமரிப்புச் செலவும் மிகக் குறைவு. இந்த என்ஜின்களுக்கு எரிபொருள் அழுத்தக் காற்று தேவை என்பதால், ஆங்காங்கு அழுத்தக் காற்று நிரப்பும் மையங்களை அரசு அமைத்தால், இத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.