3 இடங்களில் உயர் கோபுர மின்விளக்கு

Saturday, 01 February 2014 11:01 administrator நாளிதழ்௧ள் - பொதுவானவை௧ள்
Print

தினமணி             01.02.2014

3 இடங்களில் உயர் கோபுர மின்விளக்கு

விழுப்புரத்தில் காட்பாடி ரயில்வே கேட் உள்ளிட்ட 3 பகுதிகளில் ரூ.17.52 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்த நகராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் நகராட்சிக் கூட்டம், தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தில் விழுப்புரம் நகராட்சிக்கு உள்பட்ட புறவழிச் சாலை, எல்லீஸ் சத்திரம் சாலை, மாவட்ட பெருந்திட்ட வளாகம் செல்லும் சாலை சந்திப்பு பகுதிகளில் போதுமான மின் விளக்கு வசதிகள் இல்லாததால் அவ்வப்போது வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. இந்தப் பகுதிகளில் 7 குழல் விளக்குகள், 6 சோடியம் விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கோலியனூர் காய்வாயை சுத்தம் செய்ய ஒப்பந்த அடிப்படையில் 10 பணியாளர்களை நியமிப்பது, கட்டபொம்மன் நகர் பகுதியில் ரூ.1.45 லட்சத்தில் தார்ச் சாலை அமைப்பது, விஐபி நகர் மேற்கு பகுதியில் ரூ.1.80 லட்சத்துக்கு தார்ச் சாலை அமைப்பது, பி.ஜே.என். சாலை, சென்னை சாலையில் உள்ள காட்பாடி ரயில்வே கேட், திருச்சி சாலையில் உள்ள ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் எதிரில் உள்ள பகுதி ஆகிய இடங்களில் தலா ரூ.5.84 லட்சம் செலவில் உயர் கோபுர மின் விளக்கு அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் பலர் தங்கள் வார்டுகளுக்கு தேவையான திட்டங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினர். அதேபோல் தங்கள் பகுதியில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்கள் குறித்தும் விவாதித்தனர்.