சாலை புறம்போக்கு கூரை வீடு முறைப்படுத்தணும்

Tuesday, 30 November 2010 08:28 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினமலர்           30.11.2010

சாலை புறம்போக்கு கூரை வீடு முறைப்படுத்தணும்

கும்பகோணம்: கும்பகோணம் நகராட்சி கூட்டம் தலைவர் தமிழழகன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் தர்மபாலன், ஆணையர் வரதராஜன், பொறியாளர் கனகசுப்புரத்தினம் ஆகியோர் பங்கேற்றனர்.கூட்ட விவாதம் வருமாறு:சுந்தரபாண்டியன் தி.மு..,: கோவில் நகரான இங்கு கோவில்களுக்கு இடங்களில் பெரும்பாலானோர் குடியிருந்து வருகின்றனர். அரசலாறு கரைக்கு வடக்கே பட்டா நிலங்கள் உள்ளன. அங்கு சாலை புறம்போக்கில் கிழக்கு மேற்காக இரண்டு கி.மீ., தூரம் உள்ள பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட கூரை வீடுகள் உள்ளன. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர், தாழ்த்தப்பட்டோர், ஏழ்மை நிலையில் உள்ளனர். இவர்களுக்கு வீட்டு வரி விதிக்கப்படாததால் பாதாள சாக்கடை இணைப்பு வழங்க முடியவில்லை.

அவர்களுக்கு வரைமுறைப்படுத்தி அல்லது பாதாள சாக்கடை இணைப்பு வழங்க அனுமதிக்க வேண்டும்.(அனைவரும் ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது)பீட்டர்பிரான்சிஸ் பா...,: தமிழ் வழியில் கல்வி கற்றோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு செய்து சட்டசபையில் சட்டம் இயற்றிய தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் பாராட்டு, நன்றி.கிருஷ்ணமூர்த்தி தி.மு..,: நகரில் சுற்றித்திரியும் மாடு, நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். எனது வார்டில் சிறுவன் ஒருவன் நாய் கடித்து இறந்துவிட்டான்.ஆணையர்: மாடுகளை அப்புறப்படுத்த நிரந்தர முடிவு சட்டப்பூர்வமாக செய்ய வேண்டும். மாடுகளை அப்புறப்படுத்தி வரும்போது மாட்டை உரிமை கொண்டாடி வருவோரிடம் 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கவும், உரிமை கோரி வராத மாடுகளை பொதுஏலத்தில் விடுவது என தீர்மானம் ஏற்ற வேண்டும்.தெட்சிணாமூர்த்தி தி.மு..,: மாடு, நாய்களை உடன் அப்புறப்படுத்த நடவடிக்கை வேண்டும்.

ஆணையர்: நாய், பன்றிகளை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். வருவாய்துறையில் கேட்டால் மாடுகளை கொண்டு வந்துவிடுவதற்கு இடம் ஏற்பாடு செய்து கொடுக்கலாம்.முருகன் பா...,: வண்ணாங்குளம் பகுதியில் சில வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.ஆணையர்: அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.ஆதிலஷ்மி அ.தி.மு..,: தெருவிளக்கு அமைக்க இரு வார்டுகளுக்கு மின்கட்டண காப்புத்தொகை செலுத்த பொருள் வைக்கப்பட்டுள்ளது. எனது வார்டில் நீண்ட நாளாக வடக்கு வீதியில் தெருவிளக்கு வசதி கேட்டு வருகிறேன்.தலைவர்: அதிகாரிகளை சென்று பார்க்கச் சொல்கிறேன்.ஆதிலஷ்மி: கவுன்சிலர்கள் கொடுக்கும் மனுக்கள் பதிவேடுகளில் பதியவைத்து பராமரிக்கப்படுகிறதா?பொறியாளர்: வார்டு வாரியாக சொல்லப்படும் பொதுவான செய்திகள் பதியப்படுகிறது.துளசிராமன் அ.தி.மு..,: தண்ணீர் வரத்து அதிகமுள்ளதால் இரண்டு முறை நகரில் குடிநீர் விட வேண்டும்.தலைவர்: நமக்கு கொள்ளிடம் நீர்தான் ஆதாரம். அங்கு தண்ணீர் வரலை.ராஜாநடராஜன் அ.தி.மு..,: கரும்பாயிரம் பிள்ளையார் கோவில் அருகில் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதுகாப்பின்றி உள்ளனர்.

சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும்.தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்.பீட்டர்பிரான்சிஸ் பா...,: எம்.ஜி.ஆர். நகரில் குளம்போல் நீர் சூழ்ந்து ஒரு வீடு இடிந்துதுள்ளது. நகராட்சி அதிகாரிகளுக்கு ஃபோன் செய்தேன். யாரும் ஃபோனை எடுக்கவில்லை. அவசரகாலத்தில் அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர்.தலைவர்: நான் எனது பார்வையில் நடவடிக்கை எடுக்கிறேன்.பீட்டர்பிரான்சிஸ்: சுகம் மருத்துவமனை ரோட்டில் இருபுறமும் வாகனம் நிற்பதால் போக்குவரத்து பாதிக்கிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.மின் இணைப்பு காப்புத்தொகை செலுத்துவது, வீரபத்திரசந்து மண் சாலையை சிமெண்ட் தளமாக்குவது, 50 டம்பர் பிளேசர் பின்கள் புதிதாக வாங்குவது என 32.90 லட்சத்துக்கு வளர்ச்சிப்பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.