சென்னையில் 1370 குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற நடவடிக்கை

Wednesday, 08 December 2010 10:05 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினமணி              08.12.2010

சென்னையில் 1370 குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற நடவடிக்கை

சென்னை, டிச.8: ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ் சென்னையில் 1370 குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட உள்ளதாக மேயர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசும், தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் இணைந்து குடிசை வீடுகளை கண்டறிந்து கான்கிரீட் வீடுகளாக கட்டும் பணி சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேயர் மா.சுப்பிரமணியன் இன்று சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 24 பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

பின்னர் அவர் கூறுகையில். ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தின் கீழ் சென்னை மாநகரில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் கீழ் 1370 குடிசைகள் கண்டிறியப்பட்டு, கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட உள்ளன. 315 குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் 825 கான்கிரீட் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதம் உள்ள 230 வீடுகளின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன என்றார்.

இத்திட்டத்திற்காக 10 சதவிகிதத்தினை பயனாளியும், 40 சதவிகிதத்தினை மாநில அரசும், 50 சதவிகிதத்தினை மத்திய அரசும் செலவு செய்வதாக மேயர் தெரிவித்தார்.