சென்னையில் 1370 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றம் மேயர் தகவல்

Thursday, 09 December 2010 05:51 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினகரன்            09.12.2010

சென்னையில் 1370 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றம் மேயர் தகவல்

சென்னை, டிச.9: சென்னையில் 1,370 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட உள்ளன என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது. மேயர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று 24 பேருக்கு கான்கிரீட் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார். விழாவில் மேயர் பேசியதாவது:

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசும், தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் இணைந்து குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சென்னையில் 1,370 குடிசைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதில் 315 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் 825 குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது. மீதியுள்ள 230 குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும்.

ஒரு கான்கிரீட் வீட்டுக்கு ரூ 1.3 லட்சம் செலவிடப்படுகிறது. இதில் வீட்டு உரிமையாளர் 10 சதவீதம் செலவிட வேண்டும். 40 சதவீத தொகையை மாநில அரசும், 50 சதவீத தொகையை மத்திய அரசும் வழங்குகிறது. முதல்வரின் குடிசையில்லா நகரமாக்கும் திட்டத்தின் படி இந்த பணி விரைந்து முடிக்கப்படும். இவ்வாறு மேயர் பேசினார்.

ஒரு கான்கிரீட் வீட்டுக்கு ரூ1.3 லட்சம் செலவிடப்படுகிறது. இதில் வீட்டு உரிமையாளர் 10 சதவீதம் செலவிட வேண்டும். 40 சதவீத தொகையை மாநில அரசும், 50 சதவீத தொகையை மத்திய அரசும் வழங்குகிறது. முதல்வரின் குடிசையில்லா நகரமாக்கும் திட்டத்தின் படி இந்த பணி விரைந்து முடிக்கப்படும். இவ்வாறு மேயர் பேசினார்.