சென்னையில் 1,370 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாறுகிறது

Thursday, 09 December 2010 11:21 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினமலர்          09.12.2010

சென்னையில் 1,370 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாறுகிறது

சென்னை: சென்னை நகரில், 1,370 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட உள்ளதாக, மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.ஜவகர்லால் நேரு நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து குடிசைப் பகுதிகளில் உள்ள வீடுகளை கண்டறிந்து, கான்கிரீட் வீடுகளாக கட்டும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஒரு வீட்டிற்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவிடப்படும் வகையில், 10 சதவீத தொகையை பயனாளி ஏற்றுக் கொள்ள வேண்டும், 50 சதவீத தொகையை மத்திய அரசும், 40 சதவீத தொகையை மாநில அரசும் வழங்கும்.சைதாப்பேட்டையில் 24 பயனாளிகளுக்கு கான்கிரீட் வீட்டிற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை மேயர் சுப்ரமணியன் நேற்று வழங்கி கூறும் போது, "நகரில் 1,370 குடிசைகள் கண்டறியப்பட்டு கான்கிரீட் வீடுகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 315 குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக கட்டும் பணி முடிவடைந்துள்ளது. 865 கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி தற்போது நடக்கிறது. மீதமுள்ள 230 வீடுகளின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்' என்றார்.