குறைந்த வருவாய் பிரிவினருக்கு 900 வீடுகள் ஒதுக்கீடு வீட்­டு­வ­சதி வாரியம் முடிவு

Thursday, 18 July 2013 07:05 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினமலர்          18.07.2013

குறைந்த வருவாய் பிரிவினருக்கு 900 வீடுகள் ஒதுக்கீடு வீட்­டு­வ­சதி வாரியம் முடிவு

சென்னை சோழிங்­கல்­லுாரில், பிரிபேப் தொழில்­ நுட்­பத்தை பயன்­ப­டுத்தி, 1,500 வீடுகள் கட்டும் திட்­டத்தில், 900 வீடு­களை, குறைந்த வருவாய் பிரி­வி­ன­ருக்கு ஒதுக்க, வீட்­டு­வ­சதி வாரியம் முடிவு செய்­துள்­ளது.

ஆட்­சேபம் சோழிங்­கல்­லுாரில், பிரி பேப்எனப்­படும், முன் தயா­ரிப்பு கட்­டு­மான தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி, 1,500 வீடுகள் கொண்ட புதிய அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பு கட்­டப்­படும் என, முதல்வர் ஜெய­ல­லிதா, சட்­ட­ச­பையில் அறி­வித்தார்.

இதற்­காக தேர்வு செய்யப்­பட்ட நிலங்கள், தனியார் வீட்டு மனை­க­ளாக இருந்­தவை. இதை புதிய திட்­டத்­துக்கு பயன்­ப­டுத்த ஆட்­சேபம் தெரி­வித்து, நிலத்தை இழந்தோர் இழப்­பீட்டுத் தொகை பெறாமல் உள்­ளனர்.

இருப்­பினும், இந்த திட்­டத்­துக்­கான நிர்­வாக ஒப்­புதல், கடந்த மாதம் நடந்த வாரிய நிர்­வாக குழு கூட்­டத்தில்
வழங்­கப்­பட்­டது.

இதை அடுத்து, ‘பிரி பேப்’ முறையில், அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பு திட்­டத்தை மேற்­கொள்­வ­தற்­கான ஒப்­பந்த புள்­ளிகள் கோரப்­பட்டு உள்­ளன.

900 வீடுகள்

இதுகுறித்து வீட்­டு­வ­சதி வாரிய உய­ர­தி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:

குறிப்­பிட்ட சில மாற்­றங்­க­ளுடன், 379 கோடி ரூபாயில், 10 மாடி­க­ளுடன், 1,500 வீடுகள் கொண்ட இத்­திட்­டத்தில், ஒவ்­வொன்றும், 1,076 சதுர அடி பரப்­ப­ளவில் மூன்று படுக்­கை­யறை கொண்ட, 160 வீடுகள், உயர் வருவாய் பிரி­வி­ன­ருக்கு ஒதுக்­கப்­படும்.

இரண்டு படுக்கை அறை­யுடன், 700 சதுர அடி பரப்­ப­ளவில், 440 வீடுகள் நடுத்­தர வருவாய் பிரி­வி­ன­ருக்கு ஒதுக்­கப்­படும்.

இதற்கு அடுத்­த­ப­டி­யாக, ஒற்றை படுக்­கை­ய­றை­யுடன், ஒவ்­வொன்றும், 484 சதுர அடி பரப்­ப­ளவில், 900 வீடுகள், குறைந்த வருவாய் பிரி­வி­ன­ருக்கு ஒதுக்­கப்­படும். மற்ற திட்­டங்­களை காட்­டிலும், குறைந்த வருவாய் பிரி­வி­ன­ருக்கு அதிக வீடுகள் கிடைக்கும் வகையில் இந்த ­திட்டம் வடி­வ­மைக்­கப்­பட்டு உள்­ளது.

வச­திகள்

குறைந்த வருவாய் பிரி­வி­ன­ருக்­கான வீடு­களில் ஒவ்­வொரு படுக்கை அறையும் ‘பால்­கனி’ வச­தி­யுடன் வடி­வ­மைக்­கப்­ப­டு­வது, இதன் இன்­னொரு சிறப்பு அம்சம். மேலும், தரை­த­ளத்­துடன் முதல் தளம் கொண்­ட­தாக, 2,000 சதுர மீட்­டரில் பொது பயன்­பாட்டு வளாகம் இக்­கு­டி­யி­ருப்பில் அமைக்­கப்­படும்.

இத்­திட்­டத்­துக்­கான வடி­வ­மைப்­பு­களை உரு­வாக்­கு­வது மற்றும் கட்­டு­மான பணி­களை மேற்­கொள்­வ­தற்­கான ஒப்­பந்­த­ புள்­ளிகள் கோரப்­பட்­டுள்­ளன. அடுத்த ஒரு மாதத்­துக்குள், ஒப்­பந்­த­தா­ரரை தேர்வு செய்யும் பணிகள் முடிக்­கப்­படும். இவ்­வாறு அவர் கூறினார்.