ஸ்டீபன்சன் சாலையில் புதிய பாலம்

Saturday, 25 January 2014 06:59 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள் ௧ட்டமைப்பு
Print

தினமணி             25.01.2014

ஸ்டீபன்சன் சாலையில் புதிய பாலம்

ரூ. 9.9 கோடியில் திரு.வி.க. நகர் ஸ்டீபன்சன் சாலையில் புதிய பாலம் கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்த மதிப்பீட்டுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மான விவரம்: திரு.வி.க. மண்டலம் 73-வது வார்டு ஸ்டீபன்சன் சாலையில் உள்ள பழைய பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டப்படும். இதற்கு ரூ. 9.9 கோடி ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான நிதி மாநகராட்சி ஆணையரின் நிர்வாக அனுமதி பெறப்பட்ட பின்னர் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்தப் பணி, பாலங்கள் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும்.