ரூ.60.50 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைச்சர் சுந்தரராஜ் திறந்து வைத்தார்

Saturday, 25 January 2014 09:55 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள் ௧ட்டமைப்பு
Print

தினகரன்             25.01.2014

ரூ.60.50 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைச்சர் சுந்தரராஜ் திறந்து வைத்தார்

பரமக்குடி, : பரமக்குடியில் ரூ.60.50 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அமைச்சர் சுந்தரராஜ் திறந்து வைத்தார்.

பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை, முத்தாலம்மன் படித்துறை, கோகுலர் தெரு, மஞ்சள்பட்டினம் பகுதியில் தலா ரூ.10 லட்சம், வைகை நகரில் ரூ.14.50 லட்சம், எமனேஸ்வரத்தில் ரூ. 6 லட்சம் என மொத்தம் ரூ.60.50 லட்சத்திலும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்  கட்டப்பட்டன.

இதற்கான திறப்பு விழா நடந்தது. நகர்மன்ற தலைவர் கீர்த்திகா தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் எம்ஏஎம் முனியசாமி, நகர்மன்ற துணை தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் தங்கப்பாண்டி வரவேற்றார்.

கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் சுந்தரராஜ் திறந்து வைத்து பேசுகையில், சட்டமன்ற நிதி தொகுதி முழுவதும் பிரித்து முறை யாக வழங்கப்பட்டு வருகி றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெண்கள் பட்டப்படிப்பில் முன்னேற வேண்டும் என்பதற்காக கடந்த ஒரே ஆண்டில் 3 கல்லூரிகளை தமிழக அரசு வழங்கியது. தற்போது கல்லூரியில் வகுப்பறை கட்ட ரூ.4.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சியில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களும் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட உள்ளன.

காட்டுபரமக்குடி முதல் காக்காதோப்பு வரை வைகை ஆற்றின் கரையோரத்தில் ரூ.6.73 கோடியில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட உள்ளது என்றார்.

ஒன்றிய செயலாளர் முத்தையா, இலக்கிய அணி செயலாளர் திலகர், அண்ணா தொழிற்சங்க பொருளாளர் நாகராஜன், ஆவின் துணை தலைவர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுகாதாரத்துறை அலுவலர் சீனிவாசன் நன்றி கூறினார்.