ராஜபாளையத்தில் ரூ. 6. 24 கோடியில் 11 இடங்களில் தார் தளம்

Wednesday, 29 January 2014 10:15 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள் ௧ட்டமைப்பு
Print

தினமணி           28.01.2014 

ராஜபாளையத்தில் ரூ. 6. 24 கோடியில் 11 இடங்களில் தார் தளம்

ராஜபாளையம் நகர்மன்ற அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் நகரில் 11 இடங்களில் ரூ. 6.24 கோடியில் செலவில் தார்தளம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

 நகர்மன்றக் கூட்டத்துக்கு தலைவர் பி.எஸ். தனலட்சுமி செல்வசுப்பிரமணியராஜா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஆணையாளர் ராமசாமி மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலையில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

  ராஜபாளையம் நகராட்சிக்கு வர உள்ள தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டஆய்வு பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளவும், இக் கூட்டுக் குடிநீர் திட்டப் பராமரிப்பு பணிகளை குடிநீர் வடிகால் வாரியமே மேற்கொள்ளவும் மன்றத்தின் அனுமதிக்கு வைத்து நிறைவேற்றப்பட்டது.

  ராஜபாளையம் 27ஆவது வார்டு கொரிஹவுஸ் நிறுவனம் அருகே ரூ. 15 லட்சம் செலவில் பொது கழிப்பிடம் கட்டவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள் கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் அரசு மானியம் ரூ. 6 கோடி நகராட்சி பொதுநிதி ரூ. 24.30 லட்சம் சேர்த்து 11 இடங்களில் தார்தளம் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

   ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் கூடுதல் இடத்தில் வாகனக் காப்பகம் அமைத்தல் உட்பட 39 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு உறுப்பினர்களின் பார்வைக்கு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நகர்மன்றத் தலைவர் பி.எஸ். தனலட்சுமி செல்வசுப்பிரமணிய ராஜா பதிலளித்துப் பேசினார்.