லாஸ்பேட்டையில்தார் சாலை பணி

Tuesday, 04 February 2014 09:36 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள் ௧ட்டமைப்பு
Print

தினமலர்             04.02.2014

லாஸ்பேட்டையில்தார் சாலை பணி

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் இரண்டு இடங்களில் தார் சாலை அமைக்கும் பணியை வைத்தியநாதன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.லாஸ்பேட்டை நெசவாளர் நகர் பாண்டியன் வீதியில் தொகுதி எம்.எல்.ஏ., நிதியில் இருந்து 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் தார் சாலையும், சாந்தி நகர் பாண்டியன் வீதியில் 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் தார் சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.இப்பணியை, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி செயற்பொறியாளர் குணசேகரன், உதவிப் பொறியாளர் கலியவரதன், இளநிலைப் பொறியாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.