சென்னையில் புதிய மேம்பாலம், சுரங்கப்பாதை: முதல்வர் திறந்து வைத்தார்

Thursday, 13 February 2014 07:11 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள் ௧ட்டமைப்பு
Print

தினமணி             13.02.2014

சென்னையில் புதிய மேம்பாலம், சுரங்கப்பாதை: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை தங்கசாலையில் புதிய மேம்பாலத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து புதன்கிழமை விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. உடன் (இடமிருந்து) தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, டி.பி.பூனாட்சி,  சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, அரசு கொறடா ஆர்.மனோகரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் காம்ப்ளே.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

தங்கசாலை மணிக்கூண்டு அருகில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. 15 மீட்டர் அகலம் மற்றும் 506.8 மீட்டர் நீளம் கொண்ட அந்த மேம்பாலம் ரூ.23 கோடி மதிப்பீட்டில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது.

அதே போல ஸ்டான்லி மருத்துவமனை அருகே  மணியசத்திர தெருவில் உள்ள ரயில்வே பாதைகளைக் கடப்பதில் பொதுமக்களுக்கு ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டது.

அதற்கான பணிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. 360 மீட்டர் நீளம் மற்றும் 8 மீட்டர் அகலத்துடன் கூடிய அந்த ரயில்வே சுரங்கப் பாதை ரூ. 15 கோடியே 76 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

ஷெனாய் நகரில் 61 ஆயிரத்து 756 சதுர அடி பரப்பளவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய நவீனக் கலையரங்கம் கட்டத் திட்டமிடப்பட்டு, ரூ.18.05 கோடியில் அப்பணிகள் முடிக்கப்பட்டன.

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இந்த புதிய கட்டடம், மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதையை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.