உள்ளூர் திட்ட குழும கூட்டம்

Monday, 31 May 2010 11:23 administrator நாளிதழ்௧ள் - பெ௫ந்திட்டம்
Print

தினகரன் 31.05.2010

உள்ளூர் திட்ட குழும கூட்டம்

ஊட்டி, மே 31:உள்ளூர் திட்ட குழுமத்தின் கூட்டம் ஊட்டி யில் நடந்தது. நகராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், ஊட்டி ஏரியை சுற்றிலும் அமைந்துள்ள தடை செய்யப்பட்ட பகுதிகளில் பிரதான புல்வெளி நில உபயோகத்தில் எந்த ஒரு நில உபயோக மாற்றமும் செய்ய கூடாது.

அங்கீகரிக்கப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தில் குடியிருப்பு பகுதி, பலதரப்பட்ட குடியிருப்பு பகுதி, மரங்கள் உள்ள பகுதி தற்போது திருத்தப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தில் விவசாய பகுதியாக மாற்றப்பட்டபின் அவ்வாறு மாற்றப்பட்டவைகளை ஏற்கனவே உள்ளவாறே நில உபயோகத்தை மாற்றி அமைக்க பரிந்துரை செய்வது.தற்போதுள்ள பிரதான சாலைகள், தனியார் சாலைகளை ஒட்டியுள்ள குடியிருப்புகள், வணிக உபயோக கட்டிடங்கள் அமைந்திருந்தால் அந்த இடங்களை பிரதான குடியிருப்பு மற்றும் பலதரப்பட்ட உபயோக பகுதியாக நில உபயோகத்தை நிர்ணயிக்க பரிந்துரை செய்வதென முடிவு செய்யப்பட்டது. 1993ம் ஆண்டு மாஸ்டர் பிளான் திட்டத்தில் இணக்கத்திற்கு முன் முழுமையாக அபிவிருத்தியான பகுதிகள் பின் தற்போது திருத்தி அனுமதிக்கப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தில் விவசாய பகுதியாக இருந் தால் ஏற்கனவே 1993ம் ஆண்டுக்கு முன் அபிவிருத்தி அடைந்த காரணத்தால் இதை பி.ஆர்., சோன் பகுதியாக மாற்ற பரிந்துரை செய்வது.

திருத்தப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தில் உத்தேச நில உபயோகம் 2011 ஆண்டு வரையிலான உத்தேச நில உபயோகம் பரப்பளவு பற்றிய பட்டியல் மற்றும் உத்தேச நில உபயோக வரைப்படம் ஆகியவை 2011 ஆண்டு வரைக்கானது மட்டுமே ஆகும்.

ஆகவே மாஸ்டர் பிளான் திட்டக்காலம் 2011 உடன் முடிவடைவதால் ஒரு புதிய முழுமைத்திட்டம், 2031 வரை நடப்பில் இருக்கும்படி தயார் செய்ய கேட்டு கொள்ள முடிவு செய்யப்பட்டது. மாஸ்டர் பிளான் கட்டுப்பாட்டு விதிகளில் பி.வி. சோனில் குறைந்தபட்ச மனையளவு பி.ஆர்., சோனில் உள்ளதுபடி வரையறுக்க வேண்டும்.

நகர் ஊரமைப்பு ஆணையர் சுற்றறிக்கையில் ந.எண்.2230/2008/மஇ.கவி நாள் 5.12.2008ன்படி காப்புக்காடுகள் எல்லையில் இருந்து 150 மீட்டர் சுற்றலடவில் எந்த ஒரு கட்டம் கட்ட அனுமதி வழங்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்த தெளிவான விதிகள் ஏதும் வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளில இல்லை. தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (மலைப்பகுதி) கட்டிட விதி 7(2)ன்படி காப்புக்காடுகள், மரங்கள் பகுதிகளின் எல்லையில் இருந்து 150 மீட்டர் சுற்றளவில் விவசாயத்திற்கோ அல்லது எந்த ஒரு உபயோகத்திற்கோ நிலம் ஒப்படை செய்யப்படக் கூடாது என்று மட்டுமே உள்ளது.

ஆகவே காப்புக்காடுகள் எல்லையில் இருந்து 150 மீட்டர் சுற்றளவில் வனத்துறையின் மறுப்பின்மை சான்று பெற்று கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கும் வகையில் கட்டுப்பாட்டு விதிகள் வரையறுக்க கேட் டுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், குதிரை பந்தய மைதானத்தை சுற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதி என்பது வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், உத்தேச நில உபயோக வரைப்படத்திலும் கட்டிடவிதி எண்.5(5)லும் குதிரைப்பந்தய ¬மாதனத்தை சுற்றிலும் 200 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே இதுபற்றி வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளைத் தெளிவாக்க கேட்டுக் கொள்ளவும், மேலும் அங்கீகரிக்கப்பட்ட முழுமைத் திட்ட கட்டுப்பாட்டு விதிகளில உள்ளவாறு இப்பகுதியில் கூரைமாற்றம் செய்தல், மராமத்துப்பணிகள் செய்தல் மற்றும் நிலையில் உள்ள கட்டுமான விதிகளுக்கு உட்பட்டு 25 சதவீதம் கட்டிட பரப்பளவு கூடுத லாக கட்டிக் கொள்ள அனுமதிக்கோரவும் முடிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே அங்கீகரிப்பட்ட மாஸ்டர் பிளானில் இருப்பது போல நில உபயோக சர்வே எண் பட்டியல் பற்றி இடங்கள் குறிப்பிடப்பட்டு சர்வே எண்கள் குறிப்பட வேண்டும். மாஸ்டர் பிளான் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளின் மனை அங்கீகாரம் பற்றி விதிகள் ஏதும் இல்லை. எந்த ஒரு அபிவிருத்தியும் உள்ளூர்த் திட்டக்குழுவின் மனை அங்கீகாரம் இல்லாமல் மேற்கொள்ளக் கூடாது. ஊட்டியில் நடைபெற்றது

ஏற்கனவே அங்கீகரிப்பட்ட மாஸ்டர் பிளானில் இருப்பது போல நில உபயோக சர்வே எண் பட்டியல் பற்றி இடங்கள் குறிப்பிடப்பட்டு சர்வே எண்கள் குறிப்பட வேண்டும். மாஸ்டர் பிளான் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளின் மனை அங்கீகாரம் பற்றி விதிகள் ஏதும் இல்லை. எந்த ஒரு அபிவிருத்தியும் உள்ளூர்த் திட்டக்குழுவின் மனை அங்கீகாரம் இல்லாமல் மேற்கொள்ளக் கூடாது.

ஊட்டி மாஸ்டர் பிளான் பகுதியைச் சுற்றிலும் உள்ள பஞ்சாயத்துப் பகுதிகளில் ஏற்படும் வேகமான கட்டிட அபிவிருத்திகளை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அரசு உத்தரவு எண் 754 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நாள் 22.11.1994ல் பிறப்பித்த உத்தரவுப்படி நீலகிரி மாவட்டப் பகுதி திட்டக்குழுமம் அமைக்க வேண்டும்.

ஏற்கனவே அரசு உத்தரவு எண்.1390 வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சித்துறை நாள்8.9.1993ல் நீலகிரி மாவட்ட அனைத்து தாலுகாக்களையும் உள்ளடக்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆர்.டி.ஆர்..., ஏற்படுத்தவும், ‘ஏஏஏமற்றும் எச்..சி.., அதிகாரங்களை இந்த குழுமத்திற்கு வழங்கிடவும், ஊட்டி திட்டப்பகுதியின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு கட்டிடங்கள் உயரக்கட்டுப்பாட்டை 15 மீட்டர் ஆக உயர்த்தி தர வேண்டும்.

கட்டிட பரப்பளவு 300 சமீ வரை அனைத்து உபயோக கட்டிடங்களுக்கும் உள்ளூர் திட்டக்குழுவே திட்ட அனுமதி வழங்க உரிய அதிகாரங்கள் வழங்கவும், படிவம் 2ல் பெறப்பட்ட ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசணைகள் பட்டியலிட்டு உரிய உள்ளூர் திட்டக்குழு பரிந்துரையுடன் நகர் ஊரமைப்பு இயக்குநருக்கு நகர் ஊரமைப்புத் துணை இயக்குநர், கோவை அவர்களின் வாயிலாக அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.