வெள்ளலூர் குப்பைக் கிடங்கை சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை

Monday, 03 February 2014 10:42 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினமணி             03.02.2014

வெள்ளலூர் குப்பைக் கிடங்கை சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை

வெள்ளலூர் குப்பைக் கிடங்கை சுகாதாரமாகப் பராமரிக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தினமும் சேகரமாகும் சுமார் 850 டன் குப்பைகள் வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இக் குப்பைகள் அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு பிராசசிங் செய்யப்படுகிறது.

குப்பையிலிருந்து துர்நாற்றம் மற்றும் கொசு, ஈக்கள் தொல்லைகளைத் தடுக்க தினமும் 5 பணியாளர்கள் பூச்சிக் கொல்லி மருந்து தெளித்து வருகின்றனர். இம்முறையானது வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு குப்பை ஏற்றி வரும் வாகனம் உள்ளே வந்ததும் முதலில் எடை மேடை அருகே மைக்ரோ ஆர்கனிசம் கலவை குப்பையின் மேல் தெளிக்கப்படுகிறது.

பிறகு குப்பையை பிராசசிங் பிளான்டில் கொட்டியவுடன் மீண்டும் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது. பிறகு உரம் தயாரிக்க குப்பைகள் கொட்டி வைப்பதன் மேலேயும் மருந்து தெளிக்கப்படுகிறது.

தினமும் சேகரமாகும் குப்பையின் மேலும் மற்றும் பிராசசிங் செய்த குப்பையின் மேலும் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் க.லதா தெரிவித்துள்ளார்.