மாநகராட்சியில் 30 வார்டுகளில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு

Monday, 03 February 2014 00:00 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினகரன்                03.02.2014

மாநகராட்சியில் 30 வார்டுகளில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு

திருப்பூர், : மாநகரில் குப்பை சேகரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.

மாநகரில் தினமும் 540டன் குப்பை சேருகிறது. இக்குப்பையை அகற்றும் பணி, மாநகராட்சி நிர்வாகத்திற்கு சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 2 மற்றும் 3வது மண்டலங்களில் உள்ள தலா 15 வார்டுகளிலும் குப்பை சேகரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், வரும் 2ம் தேதியில் இருந்து இந்த 30 வார்டுகளிலும் குப்பை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இதுதொடர்பாக, அந்த தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியும் ஆய்வுக் கூட்டம் மேயர் விசாலாட்சி தலை மையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. துணை மேயர் குணசேகரன், மண்டலத் தலைவர்கள் ராதாகிருஷ்ண ன், ஜான், கிருத்திகா சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், வீதிகளில் குப்பையை அள்ளுவது தொடர்பாக அந்த தனியார் நிறுவனம் செயல்படும் விதம் குறித்து அந்நிறுவனப் பிரதிநிதிகள் விளக்கினர். வீடுகள் தோறும் குப்பை சேகரிப்பதைக் கண்டறிவது குறித்து மேயர் விசாலாட்சி கேட்டறிந்தார். குப்பை அள்ளும் வாகனங்களில் ஜி.பி.ஆர்.கருவி பொருத்தப்பட்டு, ஆன்லைன் மூலமாக வீதிகளில் குப்பை நிரம்பியுள்ள கன்டெய்னர் கண்டறியப்படும் என்பது உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து தனியார் நிறுவனப் பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து நேற்று மாலை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள், மண்டலத் தலைவர்கள் மற்றும் நிலைக்குழு தலைவர்களுக்கு இதுதொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.