மணப்பாறை நகரில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்திட வேண்டும் நகரசபை ஆணையர் அறிவிப்பு

Monday, 17 June 2013 07:27 administrator நாளிதழ்௧ள் - நகர்ப்புற திட்டமிடுதல்
Print

தினத்தந்தி             17.06.2013

மணப்பாறை நகரில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்திட வேண்டும் நகரசபை ஆணையர் அறிவிப்பு

மணப்பாறை நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க வேண்டும் என்று மணப்பாறை நகரசபை ஆணையர் சுப்பிரமணியன் அறிவித்து உள்ளார்.

மழை நீர் சேமிப்பு

மணப்பாறை நகரசபை ஆணையர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:&

மணப்பாறை நகராட்சிப்பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் போன்ற கட்டிடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளில் பழுதுகள் ஏற்பட்டிருந்தால் அதனை சரி செய்யவும், மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்கப்படாத கட்டிடங்களுக்கு புதிதாக மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு அமைத்து அதற்கான விபரத்தினை நகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கவேண்டும்.

மழைநீர் சேமிப்பு தொடர்பான விபரங்களை பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ள நகராட்சி அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மழைநீர் சேகரிப்பு தகவல் மையத்தில் பொதுமக்கள் நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு விபரம் தெரிந்து கொள்ளலாம். மேலும் இவ் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி மழைநீர் சேமிப்பு கட்டமைப்பினை பார்த்து விபரம் தெரிந்துகொண்டு பொதுமக்கள் தங்களது கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தி விபரம் தெரிவிக்க வேண்டும்.

நீர் ஆதாரம் கிடைக்க...

வருகிற பருவமழை காலத்தில் நமக்கு கிடைக்கும் மழைநீரை வீணாக்காமல் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தி பூமிக்குள் செலுத்தலாம். மழைநீர் சேமிப்பு அமைப்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும், நீரின் தன்மை மாறுபடும். மழைநீர் சேமிப்பு அமைப்பினால் கடும் வறட்சி காலத்திலும் நீர் ஆதாரம் கிடைக்க வழிவகை உள்ளதால் பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பேணி பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு ஆணையர் சுப்பிரமணியன் கூறி உள்ளார்.