நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ஒரு மாதத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்

Tuesday, 18 June 2013 09:37 administrator நாளிதழ்௧ள் - நகர்ப்புற திட்டமிடுதல்
Print

தினகரன்                 18.06.2013 

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ஒரு மாதத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்

பொள்ளாச்சி, : பொள்ளாச்சி நகரில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைக்க வேண்டும். ஒருமாதம் காலக்கெடு விடுக்கப்பட்டுள்ளதாக அதிகரிகள் தெரிவித்தனர்.

 பொள்ளாச்சி நகராட்சி கூட்ட அரங்கில் நேற்று, மழைநீர் சேகரிப்பு குறித்த விளக்க கூட்டம் நடந்தது. இதற்கு நகர்மன்ற தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார்.  துணைத்தலைவர் விஜயக்குமார் முன்னிலை வகித்தார். நகரமைப்பு அலுவலர் சவுந்தராஜன், கவுன்சிலர்கள் வசந்த், கண்ணன், திருநீலகண்டன் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம்,  மழைநீர்  சேகரிப்பு குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

 நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டில் பருவமழை பொழிவு மிகவும் குறைவாக இருந்தது. இந்த ஆண்டில், இப்போதுதான் பருவமழை பொழிய ஆரம்பித்துள்ளது. இதைதொடர்ந்து நிலத்தடி நீர்மட்டம் உயரும் வண்ணம், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை நகரில் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சிக்குட்பட்ட 36வார்டுகளிலும் அடிக்குமாடி குடியிருப்பு, வணிகவளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள சிமென்ட் கான்கிரிட் கூரை கட்டிட பகுதிக்கான மழைநீர் சேகரிப்பு அமைப்பை அனைவரும் துவங்கப்பட வேண்டும்.  மழைநீர் சேமிப்பு அமைப்பினை ஏற்படுத்த வார்டுவாரியாக துண்டுபிரசுரம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சேகரிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இன்னும், ஒரு மாதத்திற்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை 100சதவீதம் முடிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு பகுதிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்‘ என்றார்.