பேரிடர் மேலாண்மை கருத்தரங்கு

Friday, 24 July 2009 08:55 administrator நாளிதழ்௧ள் - நகர்ப்புற திட்டமிடுதல்
Print

தினமணி 24.07.2009

பேரிடர் மேலாண்மை கருத்தரங்கு

புதுச்சேரி, ஜூலை 23: ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், பேரிடர் மேலாண்மை கருத்தரங்கு புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரழிவு மேலாண்மை துறை தொடர்பான அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு கருத்தரங்கில் செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது.

""புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியத்திலுள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகராட்சி வார்டுகளுக்கான பேரிடர் மேலாண்மைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலத்தில் துரிதமாகவும் ஒருங்கிணைந்து செயல்படவும் அவசரகால செயல் மையம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. கட்டணமில்லா தொலைபேசி எண் 1070 மூலம் பொதுமக்கள் இம் மையத்தை தொடர்பு கொள்ளலாம்'' என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

கருத்தரங்கிற்கு அரசு கூடுதல் செயலர் (வருவாய்) கோ.ராகேஷ்சந்திரா தலைமை வகித்தார். .நா. வளர்ச்சி திட்ட அதிகாரிகள் அசோக் மல்ஹோத்ரா, ஜான் டேவிட், அலோக் பட்நாயக், ரவி ரங்கநாதன் கலந்து கொண்டனர்.