மழைக் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேண்டுகோள்

Monday, 30 August 2010 10:24 administrator நாளிதழ்௧ள் - வேளாண்மை
Print

தினமணி 30.08.2010

மழைக் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேண்டுகோள்

கடலூர்,ஆக.29: மழைக் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன் அடையுமாறு கடலூர் மாவட்ட விவசாயிகளை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

÷ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் வரும் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் மழைக் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 வட்டார விவசாயிகளும் சேரலாம். 25-8-2010 முதல் 10-2-2011 வரை பெறப்படும் மழை அளவைக் கணக்கில் கொண்டு வறட்சி ஏற்பட்டால் ஏக்கருக்கு |ரூ 6 ஆயிரம் வரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

÷இத்திட்டத்தில் விவசாயிகள் சேர்வதற்கு கடைசி நாள் 6-9-2010. இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய விரும்பும் நெல் விவசாயிகள், அந்தந்த வட்டாரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பிரீமியத் தொகையை அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஆக்ஸிஸ் வங்கிக் கணக்கில் சென்னையில் மாற்றத்தக்க வரைவோலையாகப் பெற்று, அத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் நிலத்துக்கான சிட்டா அடங்கல் ஆகியவற்றையும் இணைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநரிடமோ அல்லது அவ்வலுவலகத்தில் உள்ள காப்பீட்டு நிறுவன முகவரிடமோ அளிக்கலாம். வட்டார வாரியாக ஏக்கருக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள பிரீமியத் தொகை வருமாறு: கடலூர் |ரூ596, குறிஞ்சிப்பாடி ரூ 485, அண்ணா கிராமம் ரூ618, பண்ருட்டி| ரூ 529, குமராட்சி, விருத்தாசலம் மற்றும் கம்மாபுரம் வட்டாரங்கள் ரூ 386, நல்லூர் ரூ480, மங்களூர் ரூ518, கீரப்பாளையம் ரூ408, பரங்கிப்பேட்டைரூ 469, புவனகிரி ரூ 425, காட்டுமன்னார்கோவில் ரூ 452.

÷மேலும் விவரங்களுக்கு வேளாண் காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளரை (செல் 94438- 78513) அணுகலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.