தினமலர் 06.11.2010
நகராட்சி பகுதியில் கட்டிடம் கட்ட 10 ஆவணம் சமர்பிக்க வேண்டும்
பெரம்பலூர்: “பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குள் கட்டிடம் கட்ட அனுமதி பெற 10 ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்‘ என நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கு மக்கள் விண்ணப்பிக்கும் போது, காலிமனை வரி ரசீது, நடப்பாண்டு வீட்டு வரி ரசீது, பத்திர நகல், பட்டா நகல், சர்வே வரைப்படம், சர்வே ஏ பதிவேடு நகல், புள்ளியில் படிவம், 13 ஆண்டு வில்லங்க சான்றிதழ், வரைப்படங்கள்-5, கட்டிடத்தொழிலாளர் நல நிதிக்காக டிமாண்ட் டிராப்ட் ஆகிய 10 ஆவணங்களை நகராட்சியில் அளிக்கவேண்டும். மனுதாரர் அங்கீகரிப்பட்ட மனைப்பிரிவுகளில் அடங்கும் மனைகள், பழைய டவுன் மற்றும் அனுகு சாலை உள்ள இடங்களில்கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.
அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் எவ்வித மனை ஒப்புதலோ, கட்டிட அனுமதியோ வழங்க இயலாது. 4,000 சதுர அடிக்கு மிகாமல் தரை மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் மற்றும் 2,000 சதுர அடியில் கட்டப்படும் தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட வணிக கட்டிடம் ஆகியவைகளுக்கு மனுதாரர் விண்ணப்பித்தால் கட்டிட விதிகளுக்குட்பட்டிருந்தால் அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.