குடிநீர் பற்றாக்குறையைப் போக்க 10 இடங்களில் சிறு மின்விசை பம்பு
சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க 10 வார்டுகளில் ரூ.12.50 லட்சம் செலவில் சிறு மின்விசை பம்பு அமைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நகரில் 10 வார்டுகளில் கலைஞர் காலனி, காரைக்காட்டு வெள்ளாளர் தெரு, மீனவர் காலனி, வாகீசநகர், கன்னிராமன்தெரு, சின்னத்தெரு, வ.உ.சி. தெரு, குமரன் தெரு, ஓமக்குளத்தெரு, கனகசபைநகர் 3-வது மெயின் ரோடு ஆகிய இடங்களில் சிறு மின்விசைப் பம்புகளை புதன்கிழமை நகர்மன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் இயக்கி வைத்து குடிநீர் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நகர்மன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், ஆணையர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், அதிமுக நகரச் செயலர் தோப்பு கே.சுந்தர், பால்வளத் தலைவர் சி.கே.சுரேஷ்பாபு, நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் டேங்க் ஆர்.சண்முகம், மீட்டிங் கிளார்க் காதர்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.