தினமணி 20.08.2013
மேட்டுப்பாளையம் நகராட்சியில், ரூ.10 லட்சம் மதிப்பில் சூரிய ஒளி மின் வசதிக்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இது
குறித்து, நகராட்சித் தலைவர் சதீஸ்குமார் வெளியிட்ட அறிக்கை:
மேட்டுப்பாளையம் நகராட்சியில் அவசர அவசியம் கருதி கீழ்கண்ட பணிகளுக்கு
மன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் மேட்டுப்பாளையம் 32-ஆவது
வார்டு, மணிநகர் லே-அவுட் பகுதியில், நகர்ப்புற ஊரமைப்பு திட்டத்தின் கீழ்
ரூ.10 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கவும், நகராட்சிக்குட்பட்ட சாமண்ணா
தலைமை நீரேற்று நிலையம், பங்களாமேடு பேருந்து நிலையம் அருகே உள்ள நீருந்து
நிலையம், காரமடை நீருந்து நிலையம் ஆகிய இடங்களில் உள் கட்டமைப்பு இடை
நிரப்புதல் மற்றும் இயக்குதல் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில்
பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்
நகராட்சிக்குச் சொந்தமான கட்டடப் பகுதிகளான நகராட்சி அலுவலகம், பேருந்து
நிலையம், நீரேற்று நிலையம் ஆகிய இடங்களில் மின் சிக்கனத்தின் அவசியம்
கருதி, தலா 2 கே.வி.ஏ. திறன் கொண்ட 3 சூரிய ஒளி மின் வசதிக்கான பணிகள்
ரூ.10 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.